Categories: Cinema News latest news

சரத் என்னை விடவே மாட்டார்… ஆனால் பிரபு கூட வேற மாதிரி!… சீக்ரெட் சொன்ன அபிராமி!

Abhirami: நடிகை அபிராமி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அதிகமான படங்களில் நடித்தது என்னவோ சரத்குமார், பிரபுவுடன் தான். தன்னுடைய கேரியரில் இருந்து விலகி இருக்கும் அவர் அளித்திருக்கும் பேட்டியில் சில ஆச்சரியமான விஷயங்களையும் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசி இருக்கும் அபிராமி, நான் நிறைய படங்களில் சரத்குமார் மற்றும் பிரபுவுடன் தான் நடித்து இருக்கிறேன். பிரபு சினிமா ஷூட்டிங்கில் கலகலவென இருப்பார். தினமும் பெரிய கேரியரில் சாப்பாடு கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இதையும் வாசிங்க:டைரக்‌ஷனில் களமிறங்க ரெடி! தனது முதல் ஹீரோவை பகிரங்கமாக அறிமுகப்படுத்திய ஜெயம் ரவி – இவரா?

ஆனால் நான் சைவம் என்பதால் அதிலிருந்து 20 சதவீதம் மட்டுமே என்னால் சாப்பிட முடியும். சிரிக்க வைத்து கொண்டே இருப்பார். சினிமா கதைகள் சிவாஜி சாரின் வாழ்க்கை பற்றி என பலவற்றினை பேசுவார். அவருடன் ஷூட்டிங்கில் இருப்பதே வேறு மாதிரியாக தான் இருக்கும்.

பிரபுவுக்கு அப்படியே எதிராக இருப்பவர் சரத்குமார். அவர் சாப்பிடுவதையே அளந்து தான் சாப்பிடுவார். நிறைய டயட் விஷயங்களையும், எக்ஸர்சைஸ் செய்வதையும் சொல்லி கொடுப்பார். ரொம்பவே அமைதியாகவும் இருப்பதே சரத்குமாரின் வழக்கமாக இருந்தது.

இதையும் வாசிங்க:அய்யா எப்போ நீங்க ப்ரீ?… தளபதிக்காக வெயிட்டிங்கில் இருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்… எதுக்காம்?

காலையில் தோஸ்து பட ஷூட்டிங் நடக்கும் போது மிடில் க்ளாஸ் மாதவன் படம் மதிய ஷூட்டிங்காக இருக்கும். காலையில் ஒருமாதிரியும், மதியம் ஒரு மாதிரியும் இருக்கும் என்னுடைய ஷூட்டிங் அனுபவம். அதுவே எனக்கு ரொம்பவும் ஜாலியாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily