×

சாரி ஃபேன்ஸ்... உங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன் - சகுனி பட நடிகை 

 
pranitha

நடிகர் கார்த்தி நடித்த ‘சகுனி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரணிதா சுபாஷ்.  அதன்பின் மாஸு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.  இவர் நடிகை காஜல் அகர்வாலின் தங்கை என்றெல்லாம் செய்திகள் பரவியது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது பின்னர் தெரியவந்தது.

pranitha

இந்நிலையில், இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த திருமணம் நேற்று பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் எளிமையாக நடந்துள்ளது.  தனது நீண்ட நாள் நண்பர் நிதின் ராஜு என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். இது காதல் மற்றும் குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் எனவும், கொரொனா பரவல் காரணமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News