×

ஆர்யா மார்கெட்டை தட்டி தூக்கிய டெடி.. சார்பட்டா பரம்பரை எத்தனை கோடி தெரியுமா?...

 
arya

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ இப்படத்தில் ஆர்யா, பசுபதி, சஞ்சனா நடராஜன், ஜான் கொக்கின், சந்தோஷ், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இப்படம் வட சென்னையில் பிரபலமான குத்து சண்டையை மையமாக கொண்டது. இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை ஏற்றி ஆர்யா நடித்துள்ளார்.  இப்படம் நேரிடையாக அமேசான் பிரைமில் வருகிற 22ம் தேதி வெளியாகவுள்ளது. 

arya

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவில் அதிரடியான குத்துச்சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த டிரெய்லர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

arya

இந்நிலையில், ‘ சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சுமார் ரூ.50 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் இப்படத்தை ரூ.31 கோடிக்கு வாங்கியுள்ளது. சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் தொலைக்காட்சி ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளது. மற்றும் மற்ற மொழி உரிமை உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து இப்படம் ரூ.50 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

teddy

இதுவரை ஆர்யா நடித்த திரைப்படங்களில் எந்த திரைப்படமும் இவ்வளவு அதிகமாக வியாபாரம் ஆனதில்லை. தற்போது ஆர்யாவின் மார்கெட் உயர்ந்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியான ‘டெடி’ திரைப்படம் ஓடிடியில் அதிகம் பேரால் திரும்ப திரும்ப பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை அதிகம் பார்த்து ரசித்துள்ளனர். அதேபோல், விஜய் தொலைக்காட்சியில் இப்படம் வெளியானால் 11.5 புள்ளி வரை டி.ஆர்.பி எகிறுகிறதாம். எனவேதான் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வட்டாரத்தில் ஆர்யா திரைப்படங்களுக்கு மவுசு கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News