×

இளம் வயதில் சிவாஜியுடன் எஸ்.பி.பி.. வைரலாகும் புகைப்படம்....

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ்.பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
 

இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பின்னடைவு அடைந்திருப்பதாகவும் மாறிமாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. இறுதியாக அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் 5 நிமிடம் திரைத்துறையினர் மற்றும் உலகத்திலிருக்கும் அனைத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் புதிதாக பாட வந்த சமயத்தில் எஸ்.பி.பி. சிவாஜியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News