காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல தரமான சம்பவங்களை செய்துள்ளார். 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.
அதேபோல செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம், நானே வருவேன் போன்ற படங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கு திரையில் வராத நிலையில் தோல்வியை தழுவின. ஆனால், அப்போதும் அவருக்குள்ள இருக்கிற ஜீனியஸ் இவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி தான் உள்ளது.
இதையும் படிங்க: இன்னா ஸ்பீடு!.. இந்தியன் 2 டப்பிங்கை ஆரம்பித்த கமல்ஹாசன்!.. ரஜினியோட மோத போறாரா?.. வீடியோவை பாருங்க!..
பீஸ்ட், சாணிக் காயிதம், பகாசூரன், நானே வருவேன் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த மார்க் ஆண்டனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் அவதாரம் எடுத்து ரசிகர்களை வியக்க வைத்திருந்தார்.
நானே வருவேன் படத்தின் தோல்விக்கு பிறகு மீண்டும் தம்பி தனுஷ் உடன் இணைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏற்கனவே அறிவித்த ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 மற்றும் புதுப்பேட்டை 2 படங்களை தள்ளி வைத்துவிட்டு 7g ரெயின்போ காலனி 2 படத்திற்கு கதை எழுதும் பணிகளை துவங்கி உள்ளார் செல்வராகவன்.
இதையும் படிங்க: முதலிரவுக்கு போட வேண்டிய பாடலா இது? வாலி எழுதியதை மாற்றச் சொன்ன மெய்யப்பச் செட்டியார்
7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் சாம் சி.எஸ் இசையமைக்கப் போவதை அறிவித்திருப்பதாகவே தெரிகிறது. மேஜிக் ஆஃப் சாம் சி.எஸ் என லேட்டஸ்ட் போட்டோவை போட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
கலர் கலராக பேனா வைத்துக் கொண்டு கதையெழுதாமல் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறாரே செல்வராகவன் என ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிகின்றன. கூடிய சீக்கிரமே தலைவர் 7ஜி பார்ட் 2 மூலம் தரமான சம்பவம் செய்யப் போறாரு என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை மீண்டும் எகிற வைத்து வருகின்றனர். இந்த முறை ஏமாற்றாமல் இருந்தால் சரி.
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…