×

சென்னையில் பீஸ்ட் படப்பிடிப்பு... இன்னைக்கு அந்த காட்சி எடுக்குறாங்களாம்!...

 
beast

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.  விஜய் பனியன் அணிந்து கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு ஸ்டைலாக நிற்பது போன்ற புகைப்படமும், கையில் துப்பாக்கி, வாயில் குண்டு என ஸ்டைலாக போஸ் கொடுத்து ஒரு போஸ்டரும் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

beast

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. திட்டமிட்டபடி அவர்களால் அங்கு படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் படக்குழு சென்னை திரும்பியது. ஆனால், கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார்.

beast

ஆனால், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழே சென்றுவிட்டது. மேலும், அதிகபட்சம் 100 பேர் பங்குபெற்று சினிமா படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசும் அனுமதி அளித்துவிட்டது. எனவே, படப்பிடிப்புகள் மெல்ல மெல்ல நடைபெற துவங்கியுள்ளது. எனவே, பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜயும் முடிவெடுத்துவிட்டார்.

pooja hedge

ஜூலை 1ம் தேதி முதல் பீஸ்ட் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதன்படி இன்று சென்னையில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இன்று பாடல் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

pooja hedge

எனவே, விஜயும், பூஜா ஹெக்டேவும் இப்படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள். இந்த பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைக்கவுள்ளார். விஜயுடன் நடனம் ஆட பூஜா ஹெக்டே பயிற்சி எடுத்த புகைப்படங்கள் கூட சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகியது. பயிற்சி முடிந்து இன்று விஜயுடன் நடனமாடவுள்ளார் பூஜா ஹெக்டே.. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News