×

வாலி படத்தில் முதலில் சிம்ரன் இல்லையாம்... நல்லவேளை அந்த நடிகை நடிக்கல...

 
vaalee

எஸ்.ஜே.சூர்யா முதன் முதலில் இயக்கிய திரைப்படம் வாலி. இப்படம் 1999ம் ஆண்டு வெளியானது. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே. சூர்யா ‘ஆசை’ படத்திலும் வேலை செய்தார். அப்போது அஜித்திடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே, நல்ல கதை இருந்தால் ரெடி பண்ணு.. உனக்கு நான் படம் கொடுக்கிறேன் எனக்கூறி அஜித் கொடுத்த வாய்ப்புதான் வாலி.

அப்படத்தில் முதன் முதலாக அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதிலும், வாய் பேச முடியாத வேடத்தில் வில்லனாக அசத்தியிருந்தார்.  இதற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர்  விருதையும் அவர் பெற்றார். இப்படத்தில் சிம்ரன் அழகாக வந்து நடிப்பில் அசத்தியிருந்தார். அண்ணன் அஜித்திடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் வேடத்தில் கலக்கியிருந்தார்.அதேபோல் இப்படத்தில் ஜோதிகா சிறிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

இந்நிலையில், இப்படத்தில் சிம்ரனுக்கு பதில் முதலில் நடிகை கீர்த்தி ரெட்டிதான் நடிக்க வேண்டியிருந்ததாம். இவர் தேவதை, நினைவிருக்கும் வரை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். ஆனால், சில காரணங்களால் அவர் விலகிவிட அதன்பின் ரோஜா, மீனா ஆகியோரிடம் சென்றுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. ஆனால், அவர்கள் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால் அவர்களின் கால்ஷுட் கிடைக்கவில்லையாம். எனவேதான், சிம்ரனை எஸ்.ஜே. சூர்யா நடிக்க வைத்துள்ளார். ஆனால், அதுதான் படத்திற்கே பலமாக அமைந்தது. 

பல வருடங்களுக்கு பின் இந்த தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News