Categories: Cinema News latest news television

வந்த அன்னைக்கே டைவர்ஸா..? முத்து, மீனா வாழ்க்கையில் கட்டையை போடும் ஸ்ருதி.. ஆரம்பிச்சாச்சு போலயே..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் அருகில் உட்காரும் விஜயா இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்கிறார். ஆனால் ஸ்ருதியோ அசராமல் அதெல்லாம் எப்போவோ முடிஞ்சிட்டு. இது இத்தனையாவது நைட்னா? என கணக்கு செய்கிறார்.

உடனே விஜயா அந்த கணக்கெல்லாம் வேண்டாம். நீ போய் குளிச்சிட்டு ரெடியாகு என்கிறார். இதனால் அவரும் குளித்துவிட்டு ட்ரெஸ் மாத்திக்கொள்ள விஜயா புடவை கட்டலையா என்கிறார். எனக்கு புடவை கட்ட தெரியாது. உடனே மீனா நான் கட்டிவிடவா என்கிறார். ஆனால் விஜயா நீ போய் உன் வேலையை பாரு என அனுப்பி விடுகிறார்.

இதையும் படிங்க: சேதுவுக்கு முன்பே பாலா இயக்கவிருந்த திரைப்படம்!. ஐயோ பாவம் இப்படி ஆகிப்போச்சே!..

உடனே ரோகினியை அழைத்து புடவை கட்டி மேக்கப் போட்டுவிட சொல்கிறார். அவரிடம் ஸ்ருதி, முத்து மட்டும் ஏன் இப்படி என்கிறார். அவர் அப்படி தான் குடிச்சிட்டுலாம் வருவாரு. ஒருமுறை என்னையே அடிச்சிட்டாரு என்கிறார். நீங்களும் அடிக்க வேண்டியது தானே என்கிறார் ஸ்ருதி.

முத்து மாமா பேச்சை மட்டும் தான் கேட்பாரு. இந்த மாதிரி ஆளுங்களோட ஏன் மீனா வாழ்றாங்க. அவங்க நமக்கு கோ சிஸ்டர் தானே. ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் வாங்கி கொடுத்து அவங்களை சுதந்திரமா விடணும் என்கிறார். இதை கேட்ட ரோகினிக்கே அதிர்ச்சி ஆகிவிடுகிறது. மனோஜும் வெளியில் இருந்து கேட்டு அதிர்ச்சி ஆகிவிடுகிறார். பின்னர் உங்க ஹஸ்பெண்ட் எப்படி எனக் கேட்க அவர் நிறைய படிச்சி இருக்காரு.

இதையும் படிங்க: டாடா படத்தின் தெலுங்கு வெர்ஷனா?.. நானியின் ‘ஹாய் நான்னா’ எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..

உனக்கு என்ன ஹெல்ப் நீயே பணக்கார பொண்ணு என்றதும் ரோகினி கடுப்பாகிறார். இதை தொடர்ந்து கார் வாங்குனா உனக்கு கமிஷன் கிடைக்கும்ல என்க, மனோஜ் நானே வேலையில்லாம இருக்கேன் என நினைத்து கொள்கிறார். நம்ம பர்ஸ்ட் கார் வாங்குவோம். அதுவரை அவங்களை அமைதியா வச்சிரு என்க ரோகினியும் சரியென்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily