×

சிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதை... மாரிசெல்வராஜை அலேக்கா தூக்கிய தனுஷ்....

 
சிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதை... மாரிசெல்வராஜை அலேக்கா தூக்கிய தனுஷ்....

தமிழ் சினிமாவில் தனுஷ்- சிவகார்த்திகேயனுக்கு இடையே மறைமுகமான பனிப்போர் நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். நாம் அறிமுகம் செய்த பையன் தன்னை விட ரூ.10 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வந்து விட்டானோ என்கிற காண்டில் தனுஷ் இருக்கிறார். 

அதோடு, தன்னுடன் நெருக்கமாக இருந்து, தனது படங்களை வெற்றி அடைய செய்யும் அனிருத்தையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டார் என்கிற கோபமும் சிவகார்த்திகேயன் மீது தனுஷுக்கு உண்டு.ஆனாலும், சிவகார்த்திகேயன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் வழியில் போய்க்கொண்டிருக்கிறார். 

இதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரி குவித்துள்ளது. இதனையடுத்து மாரி செல்வராஜுடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் தனுஷ் இணையவுள்ளார். 

உண்மையில், பரியேறும் பெருமாள் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் பெற்றிருந்தார் மாரி செல்வராஜ். ஆனால், சில படங்களில் நடித்துவிட்டு வருகிறேன் என சிவகார்த்திகேயன் கூறிவிட தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்தார் மாரி செல்வராஜ். 

தற்போது தனுஷை மீண்டும் இயக்கவுள்ள கதை, ஏற்கனவே மாரி செல்வராஜ் சிவகார்த்திகேயனுக்கு கூறிய கதை என தெரியவந்துள்ளது. இதனால் ‘வட போச்சே’ என ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்...
 

From around the web

Trending Videos

Tamilnadu News