×

மொபைலுக்குப் பின்னாடி இருந்து வெறுப்பைப் பரப்பாதீங்க... `லிங்கா’ நடிகை அதிரடி

தன்னைக் கிண்டல் செய்பவர்களுக்கு லிங்கா நடிகை சோனாக்‌ஷி சின்ஹா பதிலடி கொடுத்திருக்கிறார். 
 
மொபைலுக்குப் பின்னாடி இருந்து வெறுப்பைப் பரப்பாதீங்க... `லிங்கா’ நடிகை அதிரடி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சோனாக்‌ஷி. இவர் வாரிசு நடிகை என்பதால் பாலிவுட்டின் நெப்போட்டிஸம் சர்ச்சையில் சிக்கினார். இவர் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவர்.

மேலும், உடல் எடையாலும் இவரை நெட்டிசன்கள் சமீபகாலமாக கேலி செய்தனர். அதேபோல், வாரிசு என்பதால்தான் சினிமா வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கிறது என்ற பழிச்சொல்லுக்கும் ஆளானார். 

இந்த கேலி, கிண்டல்களுக்கு சோசியல் மீடியாவில் அதிரடியாகப் பதில் கொடுத்து வந்தார் சோனாக்‌ஷி. இப்போது இதுகுறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ``வாரிசு என்பதால் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவிடாது. உங்களுக்குத் திறமை என ஒன்று வேண்டும். 

சோசியல் மீடியாவில் என்னைக் கேலி செய்வதைப் பார்த்து தொடக்கத்தில் வருத்தமாக இருந்தது. அதற்கு உரிய பதிலடியும் கொடுத்து வந்தேன். ஆனால், இப்போது அந்த மாதிரி கேலி செய்பவர்களைக் கண்டுகொள்வதில்லை. அந்த மாதிரியான கேலி, கிண்டல்களைத் தாண்டி செல்ல கற்றுக்கொண்டேன். அப்படியான ஆட்கள், மொபைலுக்குப் பின்னால் இருந்து நெகட்டிவாக கருத்துப் பேசுகிறவர்கள்’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News