×

திருமண ஜோடிக்கு சர்ப்பரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்...

 
stalin

முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் திமுக சார்பில் தெரிவித்த திட்டங்களை அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். 

அதேபோல், பலரின் திருமண விழாக்களிலும் அவர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகிறார். திமுகவின் தேர்தல் பரப்புரை பாடலாக பெரும் வரவேற்பை பெற்ற ‘ஸ்டாலின்தான் வறாரு..விடியல் தரப்போறாரு’ பாடலுக்கு இசையமைத்த இசையமைபாளர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டார். 

இந்நிலையில், இன்று காலை அவர் திருவாரூர் சென்று கொண்டிருந்தார். அப்போது திருக்குவளை செல்லும் வழியில் பின்னவாசலில் எஸ்.ஆர் சோப்ரா - எஸ். இராமா ஜோடி திருமண மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அதை கவனித்த முதல்வர் ஸ்டாலின் காரை நிறுத்துமாறு கூறி அங்கு சென்று அவர்களின் உரையாடி, அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஸ்டாலின் இந்த செய்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News