டாப்பு குக்கு.. டூப்பு குக்கு.. என்னடா பேரு இதெல்லாம்!.. குக் வித் கோமாளிக்கு போட்டியாமாம்!..

 
டாப்பு குக்கு.. டூப்பு குக்கு.. என்னடா பேரு இதெல்லாம்!.. குக் வித் கோமாளிக்கு போட்டியாமாம்!..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்கிற புதிய ரியாலிட்டி ஷோ விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு குரூப் அப்படியே கழண்டு சன் டிவிக்கு சென்று இந்தப் புதிய சமையல் நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர். இதையும் படிங்க:  ஊசி போட்டு உடம்பை பெருசாக்கினாரா?.. கடை திறக்க இத்தனை கோடி கேட்குறாரா?.. ஹனி ரோஸ் ஆச்சர்யங்கள்!.. விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஏற்கனவே சன் டிவி மாஸ்டர் செஃப் என்னும் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பிரம்மாண்டமாக நடத்தியது. அதனால் அதிகமாக பொருட்செலவு செய்ததுதான் மிச்சம். அந்த நிகழ்ச்சியை பெரிதாக ரசிகர்கள் யாரும் பார்க்கவே இல்லை. அதனால் அதன் அடுத்த சீசனுக்கு தேவையில்லாமல் செலவு செய்யாமல் விஜய் டிவியின் குரூப்பை கூட்டி வந்து இன்னொரு ஷோவை அதேபோல காப்பி அடித்து நடத்த சன் டிவி முடிவு செய்து விட்டதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இதையும் படிங்க:  எம்.ஜி.ஆர் பார்முலாவை பின்பற்றும் சூப்பர்ஸ்டார்… அடுத்த வில்லன் யார் தெரியுமா?.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கடந்த நான்கு சீசன்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பட்  சன் டிவிக்கு தற்போது தாவி விட்டார். மேலும் சில கோமாளிகளை தற்போது டூப்பு குக் ஆக மாற்றி அழைத்து வந்துள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்திய இயக்குனரும் தற்போது சன் டிவி நிகழ்ச்சியில் தான் இயக்குனராக மாறி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ப்ரோமோ வை பார்த்த ரசிகர்கள் இப்படியா காப்பி அடிப்பீங்க சன் டிவி என கலாய்த்து வருகின்றனர். இதையும் படிங்க:  எல்லோரும் பயந்த டைட்டில்!.. துணிச்சலாக நடிச்ச ரஜினிகாந்த்!.. அஜித்துக்கும் வாழ்க்கை கொடுத்த படம்!..

From Around the web