×

ஒரு நிமிஷத்துல உடைச்சிட்டிங்க அண்ணா... புலம்பி தீர்க்கும் சூர்யா ரசிகர்கள்....

இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பின் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சுர்யா தனது சொந்த பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்தார். ஆனால், படம் தயாராகி வெளியாகும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தள்ளிப்போனது.
 

4 மாதங்கள் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எப்படியும் இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்த செய்தி கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எனவே, தியேட்டரில் பார்க்கும் அனுபவம் அமேசான் பிரைமில் கிடைக்காது. எனவே, ஓடிடி வேண்டாம். தியேட்டரில் ரிலீஸ் பண்ணுங்க என பலரும் கதறி வருகின்றனர். 

இதில் சில ரசிகர்கள் ‘தலைவா உங்க மேல வச்சிருந்த அளவுக்கதிகமான அன்ப ஒரு நிமிஷத்துல உடைச்சிட்டிங்க அண்ணா’ என்றெல்லாம் விரக்தியில் டிவிட் செய்து வருகின்றனர்.

சில சூர்யா ரசிகர்கள் அவரின் முடிவை புரிந்து கொண்டு நாங்கள் ஆதரவு தருகிறோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News