Categories: Cinema News latest news

சினிமாக்காக இப்படியா இறங்குவ…? தடாலடியாக இறங்கிய சூர்யா.. கடுப்பான சிவகுமார்?

Surya: தமிழ் சினிமா ஒரு படத்துக்காக தங்கள் வருத்திக்கொள்ளும் நடிகர்கள் சிலர் தான். அதிலும், சூர்யா, விக்ரம் இருவரும் ரொம்பவே ஷாக் செய்யும் அளவுக்கு வெயிட்டை குறைப்பதும், பல மணி நேர மேக்கப் போடுவதும் என அசால்ட்டாக செய்து அசர வைப்பார்கள்.

விக்ரம் சினிமாவில் ஒரு இடத்தினை தக்க வைக்க அவர் செய்த உழைப்பு ரொம்பவே அதிகம் தான். கிட்டத்தட்ட தன் கண் பறிபோகும் நிலைக்கு  கூட சென்றார். அடுத்து ஐ படத்துக்காக தன்னுடைய உடல் எடையை அதிகமாக குறைத்து கோமா நிலைக்கு கூட தள்ளப்பட்டார்.

இதையும் படிங்க: முத இத முடிக்கணும்! லியோ ஆடியோ லாஞ்சில் பக்கா ப்ளான் போட்ட விஜய்… நல்ல ஐடியா தான்!.

சமீபத்தில் கூட அவர் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் அவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டது. ஒரு படத்துக்கு பல கெட்டப் அதற்கு மேக்கப்பெல்லாம் போட்டு ஆளை காலி செய்து விடுவார். அதே மாதிரி நடிகர் சூர்யாவும் ஒரு படத்துக்கு அவர் கொட்டும் உழைப்பு அதிகம் தான். 

சாதாரண ஒரு பள்ளி மாணவன் கேரக்டருக்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்தார். அடுத்து கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்து அனைவரையும் அசரடித்தார். தற்போது தன்னுடைய 42வது படத்துக்கும் சிக்ஸ்பேக் வைத்து கடுமையான உடற்பயிற்சியில் இறங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகர் இவரா? அட செம மேட்சுப்பா!

மகனின் இந்த அர்ப்பணிப்பை பார்த்த நடிகர் சிவகுமார் மெய்சிலிர்க்கவில்லையாம். கடுப்பானதாக தான் தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி, பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவுடன் பேசிய சிவகுமார் என் பையன பாத்தா வயிறு எரியுது. வெறும் கீரைய சாப்பிடுறான். இங்க் பில்லரில் தண்ணீர் குடிக்கிறான்.

நான் நடிக்கும் காலத்தில் வெறும் தொப்பை உடன் இருந்தவர்களையே நடிகர்களாக ஏற்றுக்கொண்டனர் எனக் கூறி இருக்கிறார். இது டிஜிட்டல் காலம் சார். எல்லாம் கையில் கிடைக்கிது. அப்போ இருந்த சினிமா வேற. இப்ப இருக்க சினிமா வேற எனத் தெரிவித்ததாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily