×

சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவ்... #S40 ஷூட்டிங்கில் எப்போது கலந்துகொள்வார்?

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டதால், அவர் முழுமையாக அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார். 
 

நடிகர் சூர்யா, அவரது ரசிகர்மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர், சில நாட்கள் கழித்து தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததாகவும், தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும் ட்விட்டரில் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். இது அவரது ரசிகர்களைக் கவலையடையச் செய்தது. 


சமீபத்தில் இதுகுறித்து பேசிய சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி, `அண்ணா நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டார்’ என்று கூறியிருந்தார். இதனால், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் #S40 படத்தின் பூஜை சூர்யா இல்லாமலேயே தொடங்கியது. கொரோனாவால் சூர்யா பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முதலில் அவர் சம்மந்தப்படாத காட்சிகளைப் படமாக்கத் திட்டமிடப்பட்டது. 


இந்தநிலையில், நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று வந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை இயக்குனர் ராஜசேகரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனால், விரைவிலேயே #S40 ஷூட்டிங்கில் சூர்யா கலந்துகொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News