Categories: Cinema News latest news

சம்மந்தி லியோவில் பிசியா இருக்காரு!.. ஐஸ்வர்யாகிட்ட பிடிச்ச விஷயம் இதுதான்!.. தம்பி ராமைய்யா பளிச்!..

நகைச்சுவை நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் தம்பி ராமைய்யா தனது மகன் உமாபதிக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து வெளிப்படையாக அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

சந்தானத்தின் கிக் படத்தில் நடித்துள்ள தம்பி ராமைய்யா சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் தொடர்பாக வெளியான தகவலை உறுதி செய்தது மட்டுமின்றி திருமணம் எப்போது நடக்கும் போன்ற விஷயங்களையும் தம்பி ராமைய்யா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஹரோல்டு தாஸின் மகன் தான் லியோவா… வாவ் சொல்ல வைக்கும் லியோ சீக்ரெட்ஸ்! அடடா!

நடிகர் உமாபதி சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், அர்ஜுன் மகளை சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் திருமணம் குறித்து பேசி விரைவில் கல்யாணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

எப்போ கல்யாணம் என்கிற கேள்விக்கு பதிலளித்த தம்பி ராமைய்யா சம்மந்தி லியோ படத்தில் பிசியாக இருக்கிறார். அக்டோபர் 19ம் தேதி வரை அவர் ரொம்பவே பிஸி. அந்த படத்தை முடித்த பின்னர் தான் திருமண பேச்சுக்கள் நடைபெற்று எல்லோருக்கும் அறிவிப்போம் என்றார்.

இதையும் படிங்க: அப்பாவோட அந்த படத்துக்கு தியேட்டர்ல நாட்டு வெடிகுண்டே வச்சாங்க!.. பகீர் கிளப்பிய சண்முக பாண்டியன்!..

மருமகள் ஐஸ்வர்யா பற்றி ஒரு விஷயம் சொல்லுங்க என்கிற கேள்விக்கு பதிலளித்த தம்பி ராமைய்யா குழந்தைகள் நம்ம மூலமாக வந்தார்களே தவிர நமக்காக வரவில்லை. அவர்கள் விருப்பத்தை ஏற்று நாம் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். தமிழில் மருமகள் மற்றும் மருமகன் என்கிற இரு நல்ல வார்த்தைகள் உண்டு.

திருமணத்துக்குப் பின் ஐஸ்வர்யா எங்க விட்டுக்கு இன்னொரு மகள். அதே போல உமாபதி அர்ஜுன் சார் வீட்டுக்கு இன்னொரு மகன் என நெத்தியடியாக பேசி அதிர வைத்துள்ளார். தனி ஒருவன் 2விலும் இருக்கீங்களாமே என்கிற கேள்விக்கு, அதுபற்றி மோகன் ராஜா தான் சொல்ல வேண்டும் என எஸ்கேப் ஆகிவிட்டார் தம்பி ராமைய்யா.

Saranya M
Published by
Saranya M