×

தமிழிசையின் கணவருக்கு மிகப்பெரிய விருது… அவர் செய்த சாதனையை என்ன தெரியுமா?

தமிழிசையின் கணவர் மருத்துவர் சவுந்தர்ராஜனுக்கு துரோணாச்சார்யார் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழிசையின் கணவர் மருத்துவர் சவுந்தர்ராஜனுக்கு துரோணாச்சார்யார் விருது வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை சவுந்தர்ராஜன். மருத்துவரான இவர் மருத்துவர் சவுந்தர்ராஜன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு எம்ஜிஆரும், கலைஞரும் சந்தித்துக் கொண்டு பேசினர்.

இந்நிலையில் காங்கிரஸ் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தில் பிறந்த தமிழிசை  பாஜகவில் சேர்ந்து தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தெலுங்கானா ஆளுநனராக நியமிக்கப்பட்டார். இவரின் கணவர் சவுந்தர்ராஜனும் ஒரு மருத்துவரே. இவர் சிறுநீரக மாற்று நிபுணராக பணியாற்றி இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெச் ஐ வி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில் அவரைப் பெருமைப் படுத்தும் விதமாக அவருக்கு துரோணாச்சார்யார் விருது வழங்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News