×

கடைசி பந்து பரபரப்பு; ஷமியிடம் கோலி கூறியது என்ன தெரியுமா ?

நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்ற நிலையில் பரபரப்பான கடைசி ஓவர் சுவாரஸ்யம் பற்றி கோலி பகிர்ந்துகொண்டுள்ளார்.

 

நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்ற நிலையில் பரபரப்பான கடைசி ஓவர் சுவாரஸ்யம் பற்றி கோலி பகிர்ந்துகொண்டுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 யில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணி 20 ஆவது ஒவரை வீசும்போது வெற்றி நியுசிலாந்து பக்கமே இருந்தது. ஆனாலும் சிறப்பாக வீசிய ஷமி இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் முக்கியமானக் கட்டத்தில் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுக்கவேண்டும் என்ற சூழலில் ஷமி டெய்லரை அவுட் ஆக்கியது அவரது பவுலிங் திறமைக்கு சான்றாக அமைந்தது. இந்நிலையில் கடைசிப் பந்தின் போது மைதானத்தில் என்ன நடந்தது என கோலி ‘நான் ஷமியிடம் ஸ்டம்ப்புக்கு பந்துவீசி அவுட் ஆக்கினால் மட்டுமே நமக்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ஒரு ரன் எடுத்து அவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று கூறினேன். ஷமி அதற்கேற்றால் போல வீசி விக்கெட்டை எடுத்தார். அவரது மொத்த அனுபவமும் அந்த பந்தில் வெளிப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News