Connect with us
rajini

Cinema News

ரஜினிக்கும் முத்துராமனுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை? கடைசி வரை அது நடக்கவே இல்லை

அந்தக் காலத்தில் மூவேந்தர்களாக சினிமாவை ஆட்சி செய்து கொண்டு வந்தவர்கள் சிவாஜி, எம்ஜிஆர், மற்றும் ஜெமினிகணேசன். இவர்கள் அசைக்க முடியாத சக்தியாக சினிமாவில் இருந்தார்கள். ஆனால் இவர்களை அடுத்து நாங்கள் தான் என கெத்தாக வந்து நின்றவர்கள் ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் போன்ற நடிகர்கள். இவர்களின் படங்கள் பார்க்கும் ரசிகர்களை பரவசப்படுத்தியது.

அதுவும் நடிகர் முத்துராமன் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் துணை நடிகர் கதாபாத்திரமானாலும் நடித்துக் கொடுத்தார். ஆனால் பெரும்பாலான படங்களில் ஹீரோவாகவே நடித்தார். அதுமட்டுமில்லாமல் முத்துராமன் மீது மக்களுக்கு ஒரு நல்ல வரவேற்பே இருந்து வந்தது.

இதையும் படிங்க : தொழில்ல போட்டி இருக்கவேண்டியதுதான்! குடும்பத்துலயுமா? பாகுபாடு காட்டும் இளையராஜா

rajini1

rajini1

இவர்களை அடுத்து வந்தவர்கள் தான் ரஜினி , கமல், விஜயகாந்த் தலைமுறை நடிகர்கள். இந்த நிலையில் ரஜினியின் படத்தில் எப்படி ஜெய்சங்கர் வில்லனாக நடித்து ஒரு கம்பேக் கொடுத்தாரோ அதே போல முத்துராமனையும் ரஜினிக்கு வில்லனாக்க முயற்சி நடைபெற்றது. இயக்குனர் கலைஞானம் ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய பைரவி படத்திலேயே முத்துராமனை வில்லனாக்க பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் முத்துராமன் அப்போது ‘யாரோ பேர் எடுக்க நான் வில்லனாக நடிக்க வேண்டுமா? நான் ஹீரோவாக நடித்தவன் ’ என்று சொல்லி மறுத்து விட்டாராம். அதே போல் ரஜினி நடிப்பில் வெளியான போக்கிரி ராஜா படத்திலும் வில்லனாக நடிக்க வைக்க பஞ்சு அருணாச்சலம் முத்துராமனிடம் போய் கேட்டிருக்கிறார். அப்போதும் முத்துராமன் தயங்கினாராம். ஆனால் பஞ்சு அருணாச்சலம் ‘தயக்கம் வேண்டாம், இந்தப் படத்திற்கு பிறகு பல தயாரிப்பாளர்கள் உங்கள் வீட்டின் முன் நிற்ப்பார்கள், அந்த அளவுக்கு உங்கள் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறேன்’ என்று சொல்லி சம்மதிக்க வைத்தாராம்.

இதையும் படிங்க : யோவ் ரஜினி நீ அந்த கதையில நடிச்சாலும் படம் ஹிட்டாகும்… கடுப்பில் கமெண்ட் அடித்த பாரதிராஜா..

rajini2

rajini2

போக்கிரி ராஜா படத்தில் மனோரமாவிற்கு கணவனாக சில நாள்கள் நடித்தாராம் முத்துராமன். ஆனால் அதன் பின் இந்த உலகத்தை விட்டே மறைந்து விட்டார். அப்போது அவர் நடித்த காட்சிகளை அப்படியே படத்தில் இருந்து தூக்கி விட்டார்களாம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெறொரு நடிகரை வைத்து நடிக்க வைத்திருக்கின்றனர். இந்த சுவாரஸ்ய செய்தியை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.  ஏனோ ரஜினிக்கும் முத்துராமனுக்கு ராசியே இல்லாமல் போய்விட்டது.

இதையும் படிங்க : கவுண்டமணியா வேண்டவே வேண்டாம்..! இவரை போடுங்க அடம்பிடித்த பிரபல நடிகர்கள்..!

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top