இதற்காக தான் நடிப்பில் இறங்கினேன்… அந்த விஷயம் நல்லா இருக்கும்.. ஓபனாக சொன்ன கௌதம் மேனன்!
Mar 20, 2024, 14:46 IST
Gautham Menon: இயக்குனராக கௌதம் வாசுதேவ் மேனன் ஹிட் கொடுத்த அதே அளவுக்கு நடிப்பிலும் தன்னுடைய ஆளுமையை செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் சினிமாவில் நடிக்க காரணம் ஒன்றும் இருப்பதாக தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இப்படம் பெரிய ஹிட்டை கொடுத்தது. அதை தொடர்ந்து, காக்க படத்தினை சூர்யாவை வைத்து இயக்கினார். இது சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. படமும் சூப்பர்ஹிட்டானது. இதையும் படிங்க: என்ன அடுத்த கல்யாணமா? நீங்க உருட்டுறது முழுசுமே தேவையில்லாத ஆணி தான்! இப்படி ஒரு பக்கம் வெற்றி படங்களை இயக்கி கொண்டு இருந்த நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கு அவருக்கு நிறைய கடன் இருந்ததாகவும், அதற்காகவே அவர் நடிப்பதாகவும் பலரும் கிசுகிசுத்தனர். ஆனால் தற்போது அந்த விஷயம் குறித்து உண்மையான விஷயத்தினை கௌதம் மேனனே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, நான் என் படத்தின் சில காட்சிகளில் வந்ததுக்கு காரணம். செலிபிரேஷனாக நினைத்து தான் செய்தேன். ஆனால் எனக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ட்ரான்ஸ் படங்களில் நடிக்க அவர்களே என்னை தேடி வந்தார்கள். கிட்டத்தட்ட 6 மாதம் அவர்களை என்னை சந்தித்து கதை சொல்லி சமாதானம் செய்தே நடிக்க வைத்தார்கள். என் வீட்டினரை பொறுத்தவரை நான் நடிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. என் டீமும் அடுத்து என்ன படம் இயக்க போகிறோம் என்ற முடிவில் தான் இருக்கிறார்கள். இதையும் படிங்க: இளையராஜாவாக தனுஷ்… டைரக்டர் இவர் தானா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
நான் நடித்ததிலேயே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ட்ரான்ஸ், விடுதலை, கருமேகங்கள் கலைந்தது, தெலுங்கில் மைக்கேல் என்ற ஒரு படம் எனக்கு பிடித்தது. அந்த அனுபவத்துக்காக தான் நடிக்கிறேன். இதுவரை ஏன் இந்த படங்களில் நடித்தோம் என தோன்றியதே இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.
விடுதலைக்காக என்னை வெற்றிமாறன் கூப்பிடும் போது அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என நினைத்தேன். எனக்கு கற்றுக்கொள்ள கூடும் என்று தான் நடித்தேன். இயக்குனராக நான் செய்வதை இன்னொரு செய்யும் போது அது நன்றாக தான் இருந்தது. ஒரு விஷயம் இண்ட்ரஸ்டிங்காக இருந்தால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
