Categories: Cinema News latest news

நயனுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்தது இவங்களா? அசால்ட்டா சொன்னது அனல் தெறிக்க வச்சுடுச்சே

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக தனது காலெடியை எடுத்து வைத்தார் நயன். கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ் மொழியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ஐயா படத்தை தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் க்ளாமரில் குதித்தார். சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் விமர்சிக்கப்பட்டார். ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் அவருக்கு ஒரு சரியான கம்பேக்காக அமைந்தது.

இதையும் படிங்க : என் நாயகிகள் மீது பொசசிவ்னஸ் எனக்கு ஜாஸ்தி… விடவே மாட்டேன் அவங்கள… இயக்குனர் பாலா

அந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மிரள வைத்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஸ்டைலான நடிப்பையும் அந்தப் படத்தின் மூலம்தான் வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு நயனுக்கு அமைந்தது எல்லாமே கடவுள் கொடுத்த கிப்ட் என்றே சொல்லலாம். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. நல்ல கதைகளை தனக்கு முக்கியத்துவம் அமைந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் நயன்.

இந்த நிலையில் கலைப்புலி எஸ்.தாணு ரஜினிக்கு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் இன்றளவும் எந்தளவுக்கு ஒரு மாஸை கிரியேட் பண்ணுகிறதோ அதே மாதிரி நயனும் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக மக்கள் மத்தியில் அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க : இனிமே அத செய்ய மாட்டேன்.. பிக்பாஸ் வெற்றிக்கு பின் முடிவெடுத்த அசீம்… இதெல்லாம் நடக்குமா?!..

அந்தப் பட்டத்தை புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆங்கராக இருந்த டிடி என்கிற திவ்யதர்ஷினி  தான் முதன் முதலில் கொடுத்திருக்கிறார். அவர் அந்த தொலைக்காட்சியில் ஒஉர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது நயன் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருக்கிறார்.

அதிலிருந்தே நயனை லேடி சூப்பர் என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். இதை பற்றி டிடி சமீபத்தில் கூறும் போது நான் அந்தப் பட்டத்தை கொடுத்தாலும் இந்த நாள் வரைக்கும் அதை அப்படியே தாங்கி நடக்க நயன் எவ்ளோ கஷ்டப்பட்டு வருகிறார் என்பதையும் அவரின் உழைப்பின் மூலம் பார்க்க முடிகின்றது என்று கூறினார்.

 

 

 

 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini