×

இரண்டு ஆபரேஷன்... நண்பர்களின் பிரார்த்தனை... நோயிலிருந்து மீண்ட லோகேஷ் பாப்....

ஆதித்யா தொலைக்காட்சியில் மொக்க ஆஃப் த டே என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் லோகேஷ் பாப். இவர் நானும் ரௌடிதான் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய இணையதளம் மூலமாக அவரது நண்பர்கள் நிதியுதவி திரட்டினர். நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தன.
 

இதையடுத்து முதல் கட்ட அறுவை சிகிச்சை 5 மாதங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக செய்யப்பட்டது. சமீபத்தில் அவர் தலையில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கல் மீண்டும் பொருத்தப்பட்டது. இதையடுத்து குணமடைந்த லோகேஷ் பாப், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ரக்கிட ரக்கிட பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News