Connect with us

Cinema News

லெஜண்டுக்கே லெஜண்டா இருப்பாரு போல!.. தங்க கேக்கை வெட்டி பர்த்டே கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா!..

லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜன்ட் படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். தனது 30-வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா தங்க முலாம் பூசிய வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் பாலிவுட் பிரபலங்களை பிரம்மிக்க வைத்துள்ளன.

இளம் வயதிலேயே மிகப்பெரிய பணக்காரியாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா தனது பிறந்தநாளை முன்னிட்டு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய கேக் வெட்டி கொண்டாடி இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஷாக் ஆக்கியுள்ளது.

இதையும் படிங்க: விடாமுயற்சியை மறந்த அஜித் ரசிகர்கள்!.. பில்லா ரீ ரிலீஸை தியேட்டரில் சும்மா தெறிக்கவிடுறாங்களே!..

லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தேலாவா பிறந்தநாளுக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேக்கை வெட்டி கொண்டாடினார் என ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் போட்டு கதிகலங்கிப் போய் உள்ளனர்.

இந்தியில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஊர்வசி ரவுத்தேலா பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டேவை காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரேக்கப் காரணமாக சோஷியல் மீடியாவில் மறைமுகமாக கடந்த ஆண்டு சண்டைப் போட்டுக் கொண்டது எல்லாம் செம வைரலானது.

இதையும் படிங்க: அடக்கொடுமையே!.. தனுஷ், ராஷ்மிகா மந்தனா வீடியோ லீக் ஆகிடுச்சே!.. என்ன ரெண்டு பேரும் இப்படி ஓடுறாங்க!

தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா பக்கமும் தலை காட்ட தொடங்கி உள்ள ஊர்வசி ரவுத்தேலா லெஜண்ட் 2 படத்திலும் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடிப்பாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

30வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 3 கோடி செலவில் தங்க கேக் வெட்டியதற்கு பதிலாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு எல்லாம் துணி எடுத்துக் கொடுத்து கொண்டாடி இருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும் என நெட்டிசன்கள் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அட்வைஸும் செய்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top