Categories: Bigg Boss latest news television

ஜோவிகா வைத்து கமல் மீது கேஸ் போடுவேன்.. குண்டை போட்ட வனிதா.. தேவையா ஆண்டவரே இதெல்லாம்..?

Biggboss Tamil: பிக்பாஸ் சீசனில் ப்ரதீப் ஆண்டனி ரெட் கார்டுக்கு பின்னர் தினம் தினம் நடக்கும் பிரச்னை அவரை சுற்றி தான் நடந்துவரும் நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய ரிவியூவில் சொல்லி இருக்கும் சில விஷயம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த வார இறுதியில் ப்ரதீப் ஆண்டனிக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உள்ளிருக்கு சில போட்டியாளர்களுக்கே அது தவறாகப்பட பிரச்னை வெடித்தது. ஒரு கட்டத்தில் அது ப்ளான் என பலரும் விமர்சித்தனர்.

இதையும் படிங்க: துணிவு ஒட்டுமொத்த கலெக்‌ஷனையே தூக்கி போட்டு மிதித்த லியோ.. தரமான சம்பவம்!..

இந்நிலையில் நேற்று நடந்த ஸ்டேட்மெண்ட் டாஸ்க்கில் மீண்டும் இந்த விஷயம் வெடித்தது. இதில் சிலர் பேசிக்கொண்டு இருக்கும் போது பெண்கள் குறித்து நாங்க பேசவில்லை. கமல் சார் தான் வுமன் கார்ட் வைத்து அந்த ரெட் கார்ட் கொடுத்தார் என்றனர்.

இதையே பலர் வீடியோவாக கட் செய்து கமலை டேக் பண்ணி உங்களையே மாட்டி விட்டுட்டாங்க? இவங்களுக்கா நீங்க சப்போர்ட் பண்ணீங்க என கமெண்ட் தட்டிவருகின்றனர். இதில் பிக்பாஸ் ரிவியூ செய்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய ரிவியூவில் சொல்லிய விஷயமும் சர்ச்சையாகி இருக்கிறது.

இதையும் படிங்க: பாடிஷேம் பண்ண நிக்சன்.. சும்மா புரட்டி எடுத்த பாரதி கண்ணம்மா.. வெளியே வந்தா அவ்ளோதான்!..

ஆனால் ஜோவிகா அந்த வார வீடியோவில் தூங்க பெண்களுக்கு பயமா இருக்கு என்றே புகார் தெரிவித்து இருப்பார். கூல் சுரேஷ் பிரச்னை எதுவுமே அந்த புகார்களில் இல்லை என்பதையும் ப்ரதீப் ஆண்டனி ரசிகர்கள் வீடியோவாக ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Published by
Shamily