Connect with us
venkat prabu

Cinema News

அட்லி மட்டும் பண்ணலாம்!. நான் செஞ்சா தப்பா?!.. கோட் படம் பற்றி பொங்கிய விபி!…

Goat: சினிமாவில் கதைகள் பல வகைகளில் உருவாகும். இயக்குனரே சொந்தமாக ஒரு கதையை எழுதி இயக்குவார், ஏற்கனவே ஒரு எழுத்தாளர் எழுதிய நாவலை சினிமாவாக மாற்றுவார்கள், அல்லது ஒரு கதாசிரியரை வைத்து கதையை உருவாக்கி அதை ஒரு இயக்குனர் இயக்குவார்.

இவை எதுவுமே இல்லையெனில் வெளிநாட்டு படங்கள் பக்கம் போய்விடுவார்கள். அதிலும் இரண்டு வகை இருக்கிறது. ஒரு படத்தை அப்படியே உருவி படமாக எடுப்பார்கள். மற்றொன்று அந்த கதையில் சில மாற்றங்களை செய்து தமிழுக்கு ஏற்றவாறு எடுப்பார்கள். கேட்டால் அந்த படத்தின் இன்ஸ்பிரேஷன் மட்டுமே என்பார்கள். நாயகன் கூட அப்படி வந்த ஒரு படம்தான்.

இதையும் படிங்க: திரிஷா அந்த செய்தியை கேட்டு வருத்தப்பட்டாங்க! வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்த சீக்ரெட்

இப்படி தமிழில் ஆயிரக்கணக்கான படங்கள் வந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட். இந்த படத்தின் ஒருவரிக்கதை வெளியானபோது இது ஹாலிவுட்டில் வந்த ‘ஜெமினி மேன்’ படம் என பலரும் இணையத்தில் எழுதினார்கள். அந்த படத்தின் ஹீரோ வில் ஸ்மித். அவரை போலவே இளமையான வில் ஸ்மித் ஹீரோவை கொல்ல வில்லனால் அனுப்பப்படுவார். அதற்காக டீஏஜிங்கை பயன்படுத்தி இருப்பார்கள்.

கதைக்களம் வேறு என்றலும் ஜெமினி மேன் படத்தின் கருதான் கோட் படத்திற்கும். பொதுவாக இயக்குனர்கள் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுபோலவே வெங்கட்பிரபுவும் அதை ஒத்துக்கொள்ளவில்லை. எனக்கு ஜெமினி மேன் பிடிக்கும். ஆனால், கோட் வேறு படம் என பதில் சொன்னார்.

#image_title

இப்போது படம் வெளியாகி எல்லோருக்கும் உண்மை தெரிந்துவிட்டது. சமீபத்தில் இதுபற்றி ஊடகமொன்றில் பேசிய வெங்கட்பிரபு ‘ஜெமினி படம் என்னை ஈர்த்தது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 50 வயது ஹீரோவை 20 வயது இளைஞனாக காட்ட ஆசைப்பட்டேன். ஜவான் படத்தில் இயக்குனர் அட்லியும் இதை செய்திருப்பார்.

கோட் படத்தில் விஜயே அப்பா – மகன் ஆகிய 2 வேடங்களில் நடிக்க வேண்டும் என நான் விரும்பியதால் டீ ஏஜிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினேன்’ என சொல்லி இருக்கிறார். கோட் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் மேல் மகனுக்கும், மகளுக்கும் அப்படி என்ன கோபம்? குடைந்து எடுக்கும் பயில்வான்

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top