×

சுஷாந்த் தற்கொலை  - இப்படி மாட்டிக்கிட்டாரே வித்யாபாலன்!
 

சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது.
 

சினிமா பின்புலம் ஏதுமின்றி சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கான், கபூர், சிங் உள்ளிட்ட நட்சத்திர குடும்பங்களுக்கு ஈடாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் அவரை ஒன்று சேர்ந்து ஒதுக்கியதாலும், பட வாய்ப்புகளை பறித்ததாலும் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

சுஷாந்தின் தற்கொலையில் அவரின் காதலி ரியாவை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை வித்யாபாலன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ரியாவை வில்லி போல் சித்தரிப்பதை பார்க்கும் போது என் நெஞ்சு வெடிக்கிறது. நீதித்துறை மற்றும் விசாரணை அதிகாரிகள் மீது நம்பிக்கை உள்ளது. அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள். அதற்குள் நீங்களே தீர்ப்பு எழுதி விடாதீர்கள்’ என பதிவிட்டிருந்தார்.


இதைத்தொடர்ந்து, சுஷாந்த் சிங் மரண வழக்கை திசை திருப்ப பாலிவுட் திரையுலகம் வித்யாபலனை களம் இறப்பியிருப்பதாகவும்,அவரின் திரைப்படங்களை இனிமேல் பார்க்க மாட்டோம் எனவும் பாலிவுட் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சுஷாந்த் இறந்து போதும், அவரின் குடும்பத்தினரை ரியா கேவலமாக பேசிய போதும் அமைதியாக இருந்த வித்யாபாலன் தேவையில்லாமல் ரியாவுக்கு ஆதரவு கொடுத்து தனது மரியாதையை கெடுத்துக்கொண்டார் என அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News