Categories: Cinema News latest news

எனக்காக ஓடி வந்த அண்ணனுக்கு நான் செய்ய மாட்டேனா? பட்ட கடனை அடைக்க ஒரு நல்ல வாய்ப்பு – பயன்படுத்துவாரா விஜய்?

Actor vijay : விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்து விட்டு தளபதி68 படத்திற்காக தயாராகி வருகிறார். ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் விஜயின் வளர்ச்சி ஒரு ஆச்சரியமாகவே பார்க்கப் படுகிறது. ஓயாமல் உழைக்கும் இவரின் ஆர்வம் அடுத்து வரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கும்.

இந்த வயதிலேயும் பிரபுதேவாவுக்கு அடுத்தப் படியாக நன்கு ஆடக் கூடிய நடிகராக இருக்கிறார் விஜய். நடிகர்களில் விஜயின் நடனத்தை தான் அதிகம் பேர் விரும்புகிறார்கள். இப்படி விஜயை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையும் படிங்க: அட தொட்டதுக்கெல்லாம் சினுங்குவாரு போல – கமல், ஸ்ரீதேவி போஸ்டரை பார்த்து விரக்தியில் ரஜினி எடுத்த முடிவு!

ஆனால் இன்று உலகத் தமிழ் ரசிகர்கள் விஜயை இந்தளவுக்கு கொண்டாடுகிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். அன்றைக்கு மட்டும் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடிக்கவில்லை என்றால் விஜய் என்ற நடிகர் காணாமலேயே போயிருப்பார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் மீது விஜயகாந்த் வைத்திருந்த மரியாதை காரணமாகவே அந்தப் படத்தில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். ஆனால் அதற்கு பரிகாரமாக விஜய் என்ன செய்தார் என்றால் ஒன்றுமே செய்யவில்லை. ஏன் உடல்நிலை சரியில்லாத விஜயகாந்தை இன்று வரை ஒரு மரியாதை நிமித்தம் காரணமாக விஜய் சந்திக்கவில்லையே.

இதையும் படிங்க: நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் முடிவு ஒன்னுதான்! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்ட விஜய், அஜித்

ஆனால் ஒரு நல்ல வாய்ப்பு விஜய்க்கு வந்திருக்கிறது. கேப்டன் மகன் சண்முகப் பாண்டியன் இப்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன் அப்பாவின் இடத்தை என் மூலமாக தக்கவைத்துக் கொள்வேன் என்ற முழு மூச்சுடன் செயல் பட்டு வருகிறாராம் சண்முகப்பாண்டியன். விஜயகாந்துக்கே உரித்தான அந்த தரையில் கால்வைக்காமல் பறந்து பறந்து அடிக்கும் சண்டை பயிற்சியையும் எடுத்துக் கொண்டு வருகிறாராம்.

அந்த நேரத்தில் ஒரு அண்ணனாக விஜய்க்கு ஓடி வந்து கேப்டன் எப்படி உதவினாரோ அதே போல் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் விஜய் கெஸ்ட் ரோல் பண்ணவேண்டும் என்று விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருகிறார்களாம். மனசு வைத்தால் அல்லது இதுதான் தனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு என கருதி விஜய் இதை செய்தால் சினிமாவில் மட்டுமில்லாமல் அவரின் எதிர்கால அரசியலுக்கும் ஒரு நல்ல முன்படியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: நீங்க மட்டும் பாலிவுட் போலாம்… அவரு போக கூடாதா? ஜவானில் அட்லீ செய்த தில்லாலங்கடி!

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini