×

தன்னை தானே செதுக்கும் விஜய் - இணையத்தை கலக்கும் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகன் தளபதி விஜய் கடந்த 1974ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். மருத்துவர் ஆகவேண்டும் என்ற பெற்றோர்களின் கனவில் வளர்ந்த விஜய் பின்னாளில் நாயகனாக அவதாரமெடுத்தார்.

 

சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் வெற்றி தோல்விகளை சரிசமாக வாழ்வில் சந்தித்து சாதரண மக்களை போலவே கேலி , கிண்டலுக்கு ஆளாகி தன் வாழ்வின் இலட்சியத்தை பல இன்னல்களை கடந்து ஜெயித்து காட்டி இன்று வெற்றி நாயகனாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் தனது 46 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இவரது பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாட காத்திருந்த ரசிகர்களிடம் கொரோனா நோய் பரவுதலை கருத்தில் கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என கூறினார்.

இந்நிலையில்  தற்போது மாஸ்டர் படத்தை வழங்கவிருக்கும் Seven Screen Studio விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் விஜய்யின் உருவத்தை செதுக்குவதுபோல் உள்ள இந்த போஸ்டர் செம வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News