
Cinema News
20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விஜயகாந்த்!.. ஆனா கேப்டன் செஞ்சதுதான் ஹைலைட்!..
Published on
By
ஆக்சன் படங்களில் நடித்தே ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த. அவரின் சுபாவாமே அப்படித்தான். யாரேனும் செய்வது தவறு எனில் வேட்டியை மடித்துகொண்டு களத்தில் இறங்கிவிடுவார். படப்பிடிப்பு தளங்களில் ரசிகர்கள் யாரேனும் அலப்பறை செய்தால் அவர்களை விரட்டியடிப்பார்.
அதேபோல், ஒரு இடத்தில் இடையூறாக கூட்டம் கூடிவிட்டாலும் தனி ஆளாக எல்லோரையும் விரட்டி விடுவார். படப்பிடிப்பு தளங்களில் விஜயகாந்த் இருந்தால் நடிகைகள் மிகவும் பாதுகாப்பாக உணர்வார்கள். இதை ராதா, ராதிகா, நளினி உள்ளிட்ட பல நடிகைகளும் பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டில் சந்தித்த அவமானம்!.. அப்போது கேப்டன் விஜயகாந்த் எடுத்த அந்த முடிவு!..
விஜயகாந்த் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அதாவது அவரது ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகன். அதனால் இயல்பாகவே சண்டை போடுவது என்பது விஜயகாந்துக்கு ஊறிப்போனது. சினிமாவில் சண்டை காட்சிகளில் அதிக ஆர்வமுடன் நடிப்பார். 2 நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக சண்டைக்காட்சிகளில் நடிப்பார். அதேநேரம், தன்னுடன் சண்டை போடும் சண்டைக்காட்சி நடிகர்களுக்கு எதுவும் ஆகாமலும் பார்த்துக்கொள்வார்.
அவர்களுக்கு ஏதேனும் அடிபட்டால் முதல் ஆளாக போய் தூக்கும் நபர் விஜயகாந்தாகத்தான் இருப்பார். அதோடு, தன்னால் படப்பிடிப்பு எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்பதிலும் விஜயகாந்த் உறுதியாக இருப்பார். விஜயகாந்தை வைத்து புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் என இரண்டு படங்களை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி.
இவர் ஒரு சினிமாவில் விழாவில் பேசும்போது ‘கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. ஒரு காட்டில் சண்டைக்காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தோம். விஜயகாந்த் பறந்துவந்து எதிரிகளை சுடுவது போல காட்சி. 20 அடிக்கும் மேல் அவரை தூக்கி ரோப் கட்டியிருந்தோம்.
இதையும் படிங்க: அசால்ட் பண்ணி அடிச்சி தூக்கிய சத்யராஜ்!.. அசந்து போன விஜயகாந்த்!. அப்படி என்னதான் நடந்துச்சு?.
5 முறை திரும்ப திரும்ப அந்த காட்சியை எடுத்ததால் ரோப் அறுந்து விஜயகாந்த 20 அடியில் இருந்து கீழே விழுந்தார். சண்டைப்பயிற்சி இயக்குனர் பதறிவிட்டார். படப்பிடிப்பே நின்றுவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. விஜயகாந்துக்கு முதுகில் பயங்கர அடி. ஆனால், அதைக்காட்டிக்கொள்ளாமல் எழுந்து நின்றார்.
என்னை தனியாக அழைத்து ‘ எனக்கு அடிபட்டது தெரிந்தால் ஸ்டண்ட் மாஸ்டர் எனக்கு நல்ல ஆக்ஷன் காட்சிகளை வைக்க மாட்டார். படம் நன்றாக வராது. என்னால் நிற்கமுடியவில்லை. இது யாருக்கும் தெரியக்கூடாது. என்னை வைத்து ஒரு சின்ன ஷாட் வைப்பது போல் எடுத்து நீயே என்னை அனுப்பிவிடு’ என சொன்னார். நானும் அப்படியே செய்தேன். இப்படி ஒரு நடிகரை பார்க்கவே முடியாது’ என செல்வமணி கூறினார்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்திய 30 இயக்குனர்கள்!.. அட எல்லாமே ஹிட்டு!..
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...
Bison: சியான் விக்ரமின் மகன் துருவ். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் மூலம்...
Bison: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன....
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...