×

நான் யாரை திருமணம் செய்ய வேண்டும்?.. மீரா மிதுனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். 
 

எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆனால், நெட்டிசன்கள் எவ்வளவு திட்டினாலும் அவர் அதை அவர் கண்டு கொள்வதில்லை. சில சமயம் ரசிகர்களிடம் அவர் சண்டை போடுவதும் உண்டு.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ‘நான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். மருத்துவர், பாடகர், டேன்சர்,  தொழிலதிபர் அல்லது மாடலா’ என பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்டு கோபமடைந்த நெட்டிசன்கள் நீங்கள் ஏன் பணக்காரனை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? பணம்தான் முக்கியமா? ஏன் சாதாரண ஒருவரை நீங்கள் திருமணம்செய்யக்கூடாது.  ஏன் ஒரு தபால்காரரையோ, பால்காரர், விவசாயியை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என ஒரு நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News