வாயடைத்து போய் இருக்கும் பிரபலங்கள்… சுசித்ரா என்னும் சூலாயுதம்… அடுத்து என்ன நடக்கும்?
Suchitra: கோலிவுட் பிரபலங்கள் பலர் குறித்த அந்தரங்க விஷயங்களை பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டிகளில் பேசி வரும் நிலையில், இது உண்மையாக இருக்குமா நட்சத்திரங்களின் உண்மை முகம் என்ன என பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது, பாடகி சுசித்ரா பிரபலங்கள் குறித்து தொடர்ச்சியாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இது முற்றிலும் பொய்யாக இருக்க வாய்ப்பே இல்லை. நாங்களும் விமர்சகர் என்ற முறையில் பிரபலங்கள் பலரை பற்றி நிறைய அறிந்திருக்கிறோம்.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய், ரஹ்மான் தலையிட்டது உண்மையா? உண்மையை உடைக்கும் பிரபலம்!
முழுமையான உண்மையான தகவலாக இல்லாத பட்சத்திலும் இதில் எண்பது சதவீதம் உண்மையே இருக்கும். இவர்களின் இந்த கொடூரமான கூட்டத்தில் தான் இருந்து தப்பித்தது போலவே சுசித்ரா பேசுகிறார். அவரின் ட்விட்டர் கணக்கிலிருந்து சுசி லீக்ஸ் பிரச்சனையையும் அந்த பிரபலங்களே உருவாக்கினர் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரின் வாழ்க்கை, சினிமா என மொத்தமாக அழித்த திரை பிரபலங்களின் உண்மை முகத்தை உடைப்பதாகவே அவர் பேச்சுக்கள் இருக்கிறது. அவரின் முதல் கணவர் கார்த்திக் சுசித்ராவுக்கு மனநல பிரச்சினை இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வீடியோவை சில மனநல மருத்துவரிடம் பேசிய போது அவர்கள் இதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நடிக்க ஜிவி பிரகாஷ் வந்த போது நிறைய கண்டிஷன் போட்டேன்… அதை அவர் கேட்கவே இல்லை… ஓபனாக சொன்ன சைந்தவி!..