இப்போ தெரியுதா? ஏன் அஜித் எல்லாரையும் அவாய்டு பண்றாருனு! லாரன்ஸ் கொடுத்த திடீர் ஷாக்
Lawrence Speech: லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் மொக்கையை வாங்கிய படமாகவும் சந்திரமுகி 2 அமைந்தது. ரஜினி நடித்து மாபெரும் வெற்றியடைந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த லாரன்ஸை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய லாரன்ஸ் ஜிகர்தண்டா முதல் பாகத்தில் பாபி சிம்ஹா கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டியது நான் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 10வது படிக்கும்போதே லவ் ஃபெயிலரான சிம்பு!. அட இப்ப வரைக்கும் அது ரிப்பீட்டு!..
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் ஆனால் படம் வெளியாகி படத்தை பார்த்த பிறகு மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறினார். ஏனெனில் இப்படி ஒரு கேரக்டரை மிஸ் பண்ணிவிட்டோமே என்று நினைத்தாராம். இப்படி தன் அனுபவங்களை பற்றி பேசிய லாரன்ஸ் அவரது ரசிகர்களுக்கு சில அறிவுரைகளையும் கூறினார்.
அதாவது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதும் இல்லை. ரசிகர் மன்றங்களை ஊக்குவிப்பதும் இல்லை என்பது மாதிரியான பல குற்றச்சாட்டுகள் லாரன்ஸை நோக்கி வந்து கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கு என தனியாக பொறுப்பு கொடுக்க மாட்டேன் என்றும் எந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்களை அழைக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: மாலினிக்கு குட் பாய் சொன்ன செழியன்… அமிர்தாவை கண்டுப்பிடித்த கணேஷ்..!
மேலும் ரசிகர்களின் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை என்றும் அவர்களின் கைதட்டல் எந்த நிகழ்ச்சிக்கும் தேவையில்லை என்றும் கூறிய லாரன்ஸ் உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் உங்கள் அப்பா, அம்மாவிற்கு செலவு செய்யுங்கள் என்று அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
ஒரு நடிகரின் பட விழாவிற்கு ஆங்காங்கே இருந்து வரும் ரசிகர்களுக்கான செலவு என்னவாகும் என ஒரு ரசிகனாக இருந்த எனக்கு தெரியும் என்றும் எங்கள் படத்தை பார்த்தாலே எங்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி என்றும் உங்கள் வீட்டில் இருந்தே என் போன்ற நடிகர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்றும் எமோஷனலாக பேசி இருந்தார்.
இதையும் படிங்க:ச்ச! இப்படி ஒரு ஆசையில் இருந்திருக்காரே! நிறைவேறா ஆசையில் நம்மை விட்டுச் சென்ற எஸ்.பி.பி
அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் ரசிகர்களை பற்றி முன்வைக்கப்பட்டன. அதாவது ரசிகர்களுடன் ஒரு போட்டோ எடுக்க மாட்டார். ரசிகர்களை சந்திக்கவும் மாட்டார். உரையாடவும் மாட்டார் என தொடர்ந்து அவர் மீது பல சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்க,
இப்போது லாரன்ஸ் கூறிய அறிவுரையை பார்க்கும் போது அஜித் எடுத்த முடிவு தான் சரி என்றே யோசிக்க வைக்கிறது. ரசிகர்கள் ரசிகர்களாக இருந்து மட்டுமே படத்தை பார்த்தால் போதும். அது பெரிதாக போகும் போதுதான் பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று பல பேர் கமெண்ட்கள் மூலம் கூறிவருகிறார்கள்.