Connect with us
spb

Cinema News

ச்ச! இப்படி ஒரு ஆசையில் இருந்திருக்காரே! நிறைவேறா ஆசையில் நம்மை விட்டுச் சென்ற எஸ்.பி.பி

SPB : இந்திய சினிமாவிலேயே ஒரு அசைக்க முடியாத பாடகராக வலம் வந்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருடைய சினிமா கெரியரில் கிட்டத்தட்ட 40000க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 16 இந்திய மொழிகளில் பாடி மிகப்பெரும் சாதனை படைத்தவர். 1966 ஆம் ஆண்டு முதல் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த எஸ்.பி.பியை அனைவரும் செல்லமாக பாடும் நிலா என்றே அழைத்தனர்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ரோகிணி அம்மாவை லாக் செய்த மீனா… ஒரே பதிலால் மாட்டிவிட்ட க்ரிஷ்…

பாடகர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக தயாரிப்பாளராக இசையமைப்பாளராக என தன்னுடைய பன்முகத் திறமைகளால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஆறு மொழிகளிலும் சிறந்த ஆண் பாடகருக்கான தேசிய விருதை வாங்கிய ஒரே பாடகர் இவர்தான்.

இவர் வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லலாம். இசைஞானியின் இசையில் எஸ்.பி.பியின் குரலில் ஒட்டுமொத்த சினிமாவுமே அவர்கள் கால்களில் விழுந்து கிடந்தன. அந்தளவுக்கு இருவரின் கூட்டணியில் அமைந்த பெரும்பாலான பாடல்கள் தான் இன்று வரை மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: கன்னத்தில் அறைந்த அசின்!.. அதிர்ந்துபோய் அப்படியே நின்ற விஜய்!.. அட அந்த படத்திலா?!..

இந்த நிலையில் எஸ்.பி.பியிடம் ஒரு நிருபர் ‘பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என உங்கள் திறமையை நிருபித்து விட்டீர்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டாராம்.

அதற்கு எஸ்.பி.பி ‘இன்னும் 5 அல்லது 6 வருடங்கள் தான். அதன் பிறகு நான் பாடுவதை நிறுத்திக் கொள்வேன். பின்னர் சினிமாவில் இருக்கும் எல்லாத் துறைகளிலும் பணியாற்ற வேண்டும் என நினைக்கிறேன். இதையெல்லாம் தெரிந்த பின் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதே என் ஆசை’ என கூறினாராம். இதுதான் எஸ்.பி.பியின் நிறைவேறாத ஆசையாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: அனிருத்தை கடைசி வரை நம்பாத லோகேஷ் கனகராஜ்!.. எல்லாத்துக்கும் ஜெயிலர் படத்துல அவர் பண்ண வேலை தான் காரணமா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top