அல்ட்ரா லெவலில் ரெடியாகி இருக்கும் லியோ ஆடியோ ரிலீஸ் அறிவிப்பு வீடியோ…! வைரலாக்கும் விஜய் ஃபேன்ஸ்..

by Akhilan |
அல்ட்ரா லெவலில் ரெடியாகி இருக்கும் லியோ ஆடியோ ரிலீஸ் அறிவிப்பு வீடியோ…! வைரலாக்கும் விஜய் ஃபேன்ஸ்..
X

Leo Audio: விஜயின் லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய அதிருப்தியை வரிசையாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடியோ ரிலீஸ் நடத்த அறிவிப்பு வீடியோவே தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.

லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மலேசியாவில் நடக்க இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் அங்கு எந்த அரங்கும் கிடைக்கவில்லை. வெளியிடத்தில் நடத்தினாலும் மழை வரும் என்பதால் வெளிநாட்டில் நடத்த இருந்த ஐடியா கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: லியோ ஆடியோ ரிலீஸில் நடக்க இருந்த போராட்டம்… நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது சுயநலத்துக்கு தானா?

தமிழ்நாட்டில் மதுரையில் நடத்தலாம் எனப் படக்குழு ரொம்பவே ஆசைப்பட்டது. ஆனால் விஜயை அடுத்த முதல்வர் என ரசிகர்கள் கோஷமிட்டால் அது அவரின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும். லியோ படத்தின் வசூலும் குறைந்து விடும் என்பதால் அதற்கும் விஜய் நோ சொல்லிவிட்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் எனக் கூறப்பட்டது. இதனால் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 30ந் தேதி நடக்கும் என பலரும் நினைத்தனர். சில நாட்களே இருந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக படக்குழு அறிவித்தது.

லியோ ஆடியோ ரிலீஸ் நடத்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பு வீடியோவையும் எடிட் செய்து தயார் நிலையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: கேண்ட்டீனுக்கே ஓட்டிங் வைத்த ராதிகா… கணேஷிடம் சிக்கிய அம்ருதா ஆதாரம்!

ஆனால் இது செவன் ஸ்க்ரீன் லோகோவுடன் இருந்தாலும் அது அவர்கள் எடிட் செய்த வீடியோ தானா? இல்லை ரசிகர்கள் தயாரித்து வெளியிட்ட வீடியோவா என பல கேள்விகள் இருக்கிறது. ஆனாலும் அந்த வீடியோவிற்கு விஜய் ரசிகர்கள் லைக் தட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story