அந்த டெலிட் பண்ண சீனை ரிலீஸ் செய்த லியோ டீம்!.. வெற்றி விழாவுக்கு ஃபுல் மோடில் தயார் போல!..
லியோ படத்தில் மன்சூர் அலி கான் சொல்லும் லியோ தாஸ் பற்றிய ஃபிளாஷ்பேக்கே பொய்யாக கூட இருக்கலாம் என லோகேஷ் கனகராஜ் பேட்டியில் சொன்னாலும், அதையெல்லாம் வெறும் உருட்டு தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், தற்போது அதற்காக படமாக்கப்பட்ட காட்சியையே செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தற்போது வெளியிட்டுள்ளது.
நாளை நவம்பர் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழா ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் 6000 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தழும்ப தழும்ப.. குலுங்க.. குலுங்க!.. டைட் உடையில் ட்ரீட் வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி…
லியோ தாஸ் குடும்பமே நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சற்று முன் வெளியிட்டு லியோ படத்தின் வசூல் அறிவிப்பையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்ற நிலையில், ஃபிளாஷ்பேக் பொய் என்பதை பலமாக நிரூபிக்கும் விதமாக மன்சூர் அலி கான் போர்ஷனில் இருந்து நீக்கப்பட்ட அந்த வசனத்தை மட்டும் தற்போது வெளியிட்டுள்ளனர்.
எல்லாருக்கும் ஒவ்வொரு பர்ஸ்பெக்டிவ் இருக்கும் இது என்னோட பர்ஸ்பெக்டிவ் என மன்சூர் அலி கான் சொல்லிவிட்டுத் தான் லியோ தாஸ் பற்றிய கதையையும் நரபலி கொடுக்கும் கதையையும் சொல்லி இருப்பார். படத்தில் இடம்பெற்ற அந்த ஃபிளாஷ்பேக் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை ஃபேக் ஃபிளாஷ்பேக் என லோகேஷ் கனகராஜ் பேட்டிகளில் விளக்கி வந்த நிலையில் தற்போது அதற்கான ஆதாரத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்த தடவ மிஸ் ஆகாது!.. குட்டி ஸ்டோரியுடன் தயாரான விஜய்.. லியோ வெற்றி விழாவுக்கு மனைவி வருவாங்களா?..
நாளை நடைபெறும் விழாவில் நடிகர் விஜய் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விமர்சனங்கள் குறித்தும் எல்சியூ குறித்தும் தெளிவாக பதில் அளிப்பார் என்றே தெரிகிறது.
Since you asked for it 😉 Here you go!
Perspective scene footage perfect ah irukaa? 🔥 #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @PharsFilm @ahimsafilms @GTelefilms @SitharaEnts… pic.twitter.com/rKm2i6jqcK
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023