ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சி!. லியோ ஆடியோ லான்ச் இங்கதானாம்!.. இதத்தான் எதிர்பார்த்தோம்!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் வருகிறார். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சிருஷ்டி டாங்கே, அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர்.
எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒருபக்கம் லோகேஷ் இயக்கும் படங்களை லோக்கி யூனிவர்ஸ் என ரசிகர்கள் அழைக்க துவங்கிவிட்டனர். ஏனெனில் அவரின் படங்கள் அவர்களுக்கு ஒரு புதிய உலகை காட்டுவதாக அவர்கள் நம்புகின்றனர். மாஸ்டர் படத்திற்கு பின் விஜயுடன் லோகேஷ் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: லியோ படத்தின் இண்டர்வெல் பிளாக்!.. விஜய் ரசிகர்களின் பல்ஸை எகிறவைக்கும் அப்டேட்…
அதோடு, கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் படமும் வசூலில் சக்கை போட்டு போட்டது. இப்படம் ரூ.500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே, லோகேஷ் இயக்கும் படங்களுக்கு மவுசு கூடியுள்ளது. லியோ படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, ரிலீஸுக்கு முன்பு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாதான். ஏனெனில் அதிகம் பேசாத விஜய் அதிகம் பேசும் இடம் அவர் நடிக்கும் படங்களில் இசை வெளியீட்டு விழாவில் மட்டும்தான்.
இதையும் படிங்க: டைட்டில் மட்டுமல்ல ரஜினியின் மாஸ் ஹிட்டும் காப்பி தான்… லியோ படக்கதை இது தானா?
அதோடு, சமீபத்தில் எழுந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து மற்றும் ரஜினி சொன்ன பருந்து - காக்கா கதைக்கு பதிலடியாக விஜய் எதாவது பேசுவார் அல்லது குட்டிக்கதை சொல்வார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கிறது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.
மதுரை, மலேசியா, துபாய் என பல இடங்களின் பெயர்கள் அடிபட்டது. இறுதியாக மலேசியாவில் நடிக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால், இவர்கள் கேட்ட தேதியில் அந்த அரங்கம் கிடைக்கவில்லை. எனவே, சென்னையிலேயே நடத்திவிடலாம் என திட்டமிட்டுள்ளனராம்.
செப்டம்பர் 23 அல்லது செப்டம்பர் 30ம் தேதி இரண்டில் ஏதோ ஒரு தேதியில் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. அனேகமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற அதிகம் வாய்ப்பிருக்கிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலேயே நடப்பது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அக்டோபர் 19க்கு முன்னாடி மொத்த லியோ படமும் ரிலீஸ் ஆகிடும் போல!.. அந்த விஷயத்தால் அப்செட்டான லோகேஷ்!..