லியோ படத்தின் தமிழக வசூல் இத்தனை கோடியா..? ஜெய்லரை தட்டி தூக்கியதா?

by Akhilan |   ( Updated:2023-10-20 03:01:19  )
லியோ படத்தின் தமிழக வசூல் இத்தனை கோடியா..? ஜெய்லரை தட்டி தூக்கியதா?
X

Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் நேற்று திரைக்கு வந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற அதிர்ச்சி தகவலே வெளியானது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என பலரிடையில் பேச்சுகள் எழுந்து இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லியோ. படத்தின் ஸ்டார் கேஸ்ட்டிங்கே படத்தினை வேற லெவலில் தூக்கி நிறுத்தியது. இதனால் படத்தின் முன்வியாபாரம் கிட்டத்தட்ட 450 கோடி வரை என பேச்சுகள் எழுந்தது.

இதையும் படிங்க: வேற ஒன்னும் இல்ல! மிருக தோஷம்தான்! பறவை, விலங்கு பேர்ல டைட்டில் வச்சு பல்பு வாங்கிய விஜய் படங்கள்

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூல் 700 கோடி வரை சென்றது. இதனால் அப்படத்தின் வசூலை லியோ தாண்டும் எனவும் ஆயிரம் கோடி வசூலை தொடும் எனவும் பலரும் பெருமை பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் நேற்று பல பிரச்னைகளை தாண்டி ரிலீஸான லியோ பலருக்கு ஏமாற்றம் என்றே கூற வேண்டும்.

கிட்டத்தட்ட லியோவின் திரை வரலாற்றில் லியோ மிகப்பெரிய தோல்வி படமாக தான் இருக்கும் என சிலர் ஆருடம் சொல்லி வருகிறார்கள். விமர்சனங்கள் தாறுமாறாக இருந்தாலும் படத்தின் வசூல் தானே முக்கியம் என்கிறது ஒரு கூட்டம்.

இதையும் படிங்க: ஆட்சி கலைந்தபோது எம்.ஜி.ஆர் செய்து கொண்டிருந்த அந்த விஷயம்!. மிஸ்டர் கூல் இவர்தான் போல!..

அந்த வகையில் முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே லியோவின் வசூல் கிட்டத்தட்ட 34 கோடியை தொட்டு இருக்கிறதாம். உலகளவில் பார்க்கும் போது இதன் வசூல் 120 கோடி ரூபாயிற்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் சென்னையில் மட்டுமே 5 முதல் 6 கோடி வரை வசூல் எனக் கூறப்படுகிறது.

மேலும், ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் 23 கோடி ரூபாய் மட்டுமே எனக் கூறப்படுகிறது. மேலும், லியோ படம் தான் முதல் நாளே பெரிய வசூலை குவித்து இருக்கிறதாம். தொடர்ந்து விடுமுறை தினம் வரும் நிலையில் மேலும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி ஆனாலும் ஜெயிலர் பட வசூலை லியோ தாண்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story