லியோ கதை இப்படித்தான் இருக்கும்!.. போஸ்டர்களிலேயே பொடி வைத்த லோகேஷ் கனகராஜ்.. செம தில்லுதான்!..

by Saranya M |   ( Updated:2023-09-21 21:32:18  )
லியோ கதை இப்படித்தான் இருக்கும்!.. போஸ்டர்களிலேயே பொடி வைத்த லோகேஷ் கனகராஜ்.. செம தில்லுதான்!..
X

லியோ படத்தின் அப்டேட் கொடுப்பதாக சொல்லி விட்டு தினமும் தமிழ், தெலுங்கு, இந்தி போஸ்டர்களை லியோ படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆனால், அதில் மறைமுகமாக இந்த படத்தின் கதையையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொல்லி உள்ளது தான் ரசிகர்களை அந்த போஸ்டர்களை டீகோட் செய்யத் தூண்டி வருகிறது.

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், அனுராக் காசியப், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களை தட்டித் தூக்கிய ராணி நடிகை!.. வயித்தெரிச்சலில் விருது நடிகை?..

இந்த ஆண்டு தொடக்கத்தில் வாரிசு படத்தை கொடுத்த நடிகர் விஜய் மீண்டும் தனது ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தவும் தியேட்டர் உரிமையாளர்களை கொண்டாட்டத்தில் கொண்டு செல்லவும் லியோ படத்தை இறக்க காத்திருக்கிறார்.

லியோ படம் ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் தழுவல் தான் என்பது லியோ படத்தின் ஒவ்வொரு போஸ்டர்கள் மூலமாக தெரிய வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் டிகோட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அப்துல்கலாமின் வளர்ச்சியை முன்பே கணித்த கமல் பட நடிகர்! ஜனாதிபதி ஆனதும் அந்த நடிகரிடம் கலாம் சொன்ன வார்த்தை

தனது குடும்பத்தை காப்பாற்ற ஏற்கனவே செய்து வந்த கேங்ஸ்டர் தொழிலை விட்டு வெகு தூரம் விலகி செல்லும் நபர், மீண்டும் தனது குடும்பத்தை காப்பாற்ற கையில் ஆயுதம் ஏந்தி எதிரிகளை மதம் செய்வதுதான் லியோ படத்தின் கதை என்கின்றனர்.

ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தின் கதையும் அதுதான் என்றும் த்ரிஷா மற்றும் தனது குழந்தையுடன் அமைதியான வாழ்க்கை வாழும் விஜய் சஞ்சய் தத் ஆட்களால் ஏற்படும் பிரச்சனை காரணமாக சிங்கமாக மாறி சஞ்சய் தத்தை வேட்டையாடுவது தான் கதை என்பது புரிகிறது.

இதையும் படிங்க: உங்கம்மா எங்கம்மா இல்லடா!.. இது சினிமா.. எனக்கு யாருமே எண்ட் கார்டு போட முடியாது.. திமிறிய விஷால்!..

விஜய்க்கும் சஞ்சய் தத்துக்கும் இடையே என்ன உறவு, என்ன பகை என்பதை திரைக்கதை மூலம் எப்படி படமாக்கி லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை தியேட்டர்களில் அதிர வைக்கப் போகிறார் என்பதைக் காணத் தான் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Next Story