இந்த தடவ மிஸ் ஆகாது!.. குட்டி ஸ்டோரியுடன் தயாரான விஜய்.. லியோ வெற்றி விழாவுக்கு மனைவி வருவாங்களா?..

by Saranya M |   ( Updated:2023-10-31 07:46:46  )
இந்த தடவ மிஸ் ஆகாது!.. குட்டி ஸ்டோரியுடன் தயாரான விஜய்.. லியோ வெற்றி விழாவுக்கு மனைவி வருவாங்களா?..
X

லியோ திரைப்படத்துக்கு எதிராக ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் படத்தை பார்க்க தியேட்டர்களில் 6 நாட்களுக்குப் பிறகு ஆளே வரவில்லை என ட்ரோல் செய்தாலும் லியோ படம் 12 நாட்கள் வெற்றிகரமாக ஓடி இதுவரை 540 கோடி வசூலை ஈட்டி ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் லைஃப் டைம் வசூலை தூக்கி சாப்பிட்டு விட்டது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறும் என விஜய் ஆசை ஆசையாக குட்டி ஸ்டோரி தயார் செய்து வைத்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்து விட்ட நிலையில், அந்த விழாவே ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க: வாரே வா!.. வசூலில் இங்க நான் தான் ராஜா என நிரூபித்த விஜய்!.. லியோ 12 நாளில் இத்தனை கோடி வசூலா?..

நடிகர் விஜய் புரமோஷன் செய்த படங்கள் எல்லாம் 200 கோடி முதல் 300 கோடி வரை வசூல் செய்த நிலையில், விஜய் புரமோஷன் செய்யாத லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியூ கனெக்‌ஷன் காரணமாக 540 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக ரஜினி ரசிகர்கள் மீண்டும் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் நாளை விஜய் மக்கள் நிர்வாகிகள் 6000 பேர் கலந்து கொள்ளும் லியோ வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தற்போது தயாரிப்பு நிறுவனம் வசூல் அறிவிப்புக்கு பின்னர் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரசிகன் செஞ்ச செயல பார்த்து ஆடிப்போன அஜித்! சென்னையில் படப்பிடிப்பை நிறுத்தியதற்கும் இதுதான் காரணமாம்

நாளை மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ள லியோ வெற்றி விழாவுக்கு நடிகர் விஜய்யின் மனைவி சங்கிதா வருவாரா? என்கிற கேள்வியை தற்போது ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Next Story