போட்றா வெடிய!.. லியோ ரிலீஸ் தேதியில் திடீர் டிவிஸ்ட்!.. பி ரெடி விஜய் ஃபேன்ஸ்!...

Leo release date: விஜய் ரசிகர்களும் திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் லியோ. ஏனெனில், விக்ரம் எனும் மெகா ஹிட் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜுடன் விஜய் மீண்டும் இணைந்திருக்கிறார் என்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.
மேலும், லோகேஷின் வழக்கமான கேங்ஸ்டர் படம் என்பதால் ஆக்ஷன் காட்சிகள் கண்டிப்பாக தூக்கலாக இருக்கும். குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு இப்படம் மாபெரும் விருந்தாக இருக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விக்ரம் படம் போல லியோவுக்கும் கண்டிப்பாக ஹாலிவுட் பட பாணியில் லோகேஷ் திரைக்கதை அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்! ‘லியோ’ டிரெய்லரை பார்த்து பிரமிப்பில் பிரபலம் போட்ட ட்விட்
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். மேலும் அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் போனதால் விஜய் ரசிகர்கள் அப்செட்டில் இருந்தார்கள்.
ஆனால், தொடர்ந்து புதிய அப்டேட்டுகள், அப்படத்தின் புதிய போஸ்டர்கள் என தொடர்ந்து வெளியிட்டு விஜய் ரசிகர்களை படக்குழு குஷிப்படுத்தி வருகிறது. அர்ஜூன், திரிஷா ஆகியோரின் புதிய போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி கொடுக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: லியோ டிரெய்லருக்கு வந்த ஆப்பு!.. ஓவர் ஆட்டம் போட்டா இப்படித்தான்!. அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!.
லியோ படம் வெளியாகும் அக்டோபர் 19ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் 9 மணி காட்சிகளுக்கு அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. முதல் காட்சியே 11 மணிக்குதான் வெளியாகவுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் தரப்பு தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதாவது, 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகளை நடத்தலாமா என்கிற ரீதியில் ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்பதால் இந்த வழியை தயாரிப்பாளர் தேர்ந்தெடுப்பார் எனத்தெரிகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறப்பு காட்சிகள் இருப்பதாலும், வெளிநாடுகளில் முன்னரே இப்படம் வெளியாவதாலும் இந்த முடிவை தயாரிப்பாளர் தரப்பு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த மிஷ்கினா மாறிய கெளதம் மேனன்!.. சும்மா இருக்காரா பாருங்க!.. லியோ அப்டேட் கொடுக்குறாராம்!..