விஜய் வெறித்தனமா ரசித்து கேட்கும் பாடல்களின் லிஸ்ட்!. அட அந்த ஹீரோ கூட இருக்காரே!...

by சிவா |
vijay
X

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்தை வைத்து பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அவரின் மகன் விஜய் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட போது அவரே தனது சொந்த பணத்தை போட்டு அவரை வைத்து படங்களை இயக்கினார். அப்படி விஜய் நடித்த முதல் திரைப்படம்தான் நாளைய தீர்ப்பு.

இப்போது விஜய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி உச்சத்திற்கும் சென்றுள்ளார். இதற்கு பின்னால் விஜயின் 30 வருட சினிமா அனுபவம் இருக்கிறது. விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த படம் வருகிற 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: வாயாலேயே வட சுடுறத விட்டு செயல்ல காட்டுங்க! ‘லியோ’ படத்துக்கு தயாரிப்பாளர் விடுத்த சேலஞ்ச்

விஜய் படம் என்றாலே பாடல்கள் சிறப்பாக இருக்கும். அவரின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பிடித்தது போல பாடல்கள் இருக்கும். அதற்கு காரணம் இயக்குனர் ஒரு ட்யூனை ஓகே செய்தாலும் விஜய் இசையமைப்பாளரிடம் என்று ட்யூனை போட்டு காட்டி அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது ஓகே ஆகும். இல்லையேல் வேற ட்யூனைகளை விஜய் போட சொல்லுவார்.

விஜயின் அம்மா ஷோபா ஒரு பாடகி. எனவே, விஜய்க்கும் இசை என்பது இயல்பாகவே வரும். அவர் ஒரு நல்ல பாடகரும் கூட. பல திரைப்படங்களில் பாடியிருக்கிறார். லியோ படத்தில் கூட ஒரு பாடலை பாடியிருக்கிறார். விஜய் ஒரு இசை விரும்பி. எப்போதும் பாடல்களை முனுமுனுத்து கொண்டிருக்கும் நபர் என்பது அவருடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இதையும் படிங்க: அசினுடன் ஷூட்டிங்!.. கேரவானுக்கு பின்னாடி விஜய் செஞ்ச காரியம்!.. அதிர்ந்து போன படக்குழு!..

கார் பயணத்தின் போது அவர் கேட்பது மெலடியான பாடல்கள் மட்டுமே. அந்த வகையில், விஜய் அடிக்கடி ரசித்து கேட்கும் பல பாடல்கள் இருந்தாலும் தினமும் அவர் ரசித்து கேட்கும், அவருக்கு மிகவும் பிடித்த 3 முக்கியமான பாடல்களை பற்றித்தான் பாரக்க போகிறோம்.

திருமலை படத்தில் இடம் பெற்ற ‘அழகூரில் பூத்தவளே’ விஜய்க்கு மிகவும் பிடித்த பாடலாகும். அதேபோல், சச்சின் படத்தில் இடம் பெற்ற ‘கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல’ பாடலும் விஜயின் ஃபேவரைட் ஆல்பத்தில் இருக்கிறது. அதேபோல், விக்ரம் ஹீரோவாக நடித்த பீமா படத்தில் இடம் பெற்ற ‘முதன் மழை என்னை நனைத்ததே’ பாடலும் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல். காரில் செல்லும்போதெல்லாம் அந்த பாடலை அடிக்கடி கேட்பாராம்.. இந்த பாடலை விஜய் பல நாட்கள் ரிங் டோனாகவே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிரிங்க் அண்ட் டிரைவ் கேஸில் சிக்கிய விஜய்!.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…

Next Story