Categories: latest news

கேமியோ ரோலில் கூட மாஸ் காட்டிய ரஜினிகாந்த் படங்கள்… இத நோட் பண்ணீங்களா?

Rajinikanth: மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் லால் சலாம் திரைப்படம் ரிலீஸாக நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அடுத்து செளந்தர்யா ரஜினிகாந்துக்கும் ஒரு கேமியோ ரோல் செய்ய இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி ஹீரோவாக மட்டுமல்ல கேமியோ ரோலில் கூட தனக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். பாவத்தின் சம்பளம் படத்தில் தான் முதன்முதலில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் கமல் நடித்த தாயில்லாமல் நானில்லை படத்தில் அடுத்த கேமியோ ரோல் செய்தார்.

இதையும் படிங்க: இதே வேட்டையனா இருந்தா நிலைமையே வேற!.. காத்து வாங்கும் லால் சலாம் டிக்கெட் புக்கிங்!..

1982ம் ஆண்டு வெளிவந்த நன்றி மீண்டும் வருக திரைப்படம். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே. போத்தன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். கே.பாலசந்தர் இயக்கத்தில் சரிதா நடித்த திரைப்படம் அக்னி சாட்சி.

 இப்படத்தில் ரஜினிகாந்துடன் கமல்ஹாசனும் இணைந்து கேமியோ செய்து இருப்பார். ரமணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் உருவங்கள் மாறலாம். இப்படத்தில் வொய்.ஜி.மகேந்திரன் ஹீரோவாக நடிக்க ரஜினியுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர். முக்தா எஸ்.சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த கோடை மழை திரைப்படத்திலும் கேமியோ செய்து இருந்தார்.

இதையும் படிங்க: ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..

கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் திரைப்படம். இப்படத்தில் சுஹாசினி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீதர், விவேக், லலிதா குமாரி நடித்திருந்தனர். ரஜினியுடன் விஜயகாந்தும் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார்கள். வள்ளி திரைப்படத்தில் லால் சலாம் படம் போன்று நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடித்திருப்பார்

கே.நட்ராஜ் இயக்கிய இப்படத்தினை ரஜினி கதை, வசனம் எழுதி தயாரித்து இருந்தார். குசேலன் படத்தில் அசோக்குமார் என்ற நடிகராக வந்து இருப்பார். ஆனால் அந்த படத்தில் பசுபதி தான் ஹீரோ என்பதால் இதுவும் கேமியோ கணக்கிலே வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எனக்கு யார் கூடவும் தொடர்பில்லை… சுச்சி லீக்ஸால் என் வாழ்க்கையே போச்சு… கலங்கிய ஹிட் நாயகி…

Akhilan

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

51 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago