மானங்கெட்ட மன்சூர் அலிகான்!.. இப்படியா பேசுவ.. வச்சு விளாசிய திரிஷா.. துணைக்கு வந்த லியோ இயக்குநர்!..

by Saranya M |   ( Updated:2023-11-18 22:48:54  )
மானங்கெட்ட மன்சூர் அலிகான்!.. இப்படியா பேசுவ.. வச்சு விளாசிய திரிஷா.. துணைக்கு வந்த லியோ இயக்குநர்!..
X

Mansoor Ali Khan: நடிகை திரிஷாவை மன்சூர் அலி கான் மோசமாக பேசிய நிலையில், அந்த வீடியோவை பார்த்து ஆத்திரமடைந்த திரிஷா வெளிப்படையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், திரிஷாவுக்கு ஆதரவாக லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மன்சூர் அலி கானை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

மன்சூர் அலி கானை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தில் முதலில் கார்த்திக்கு பதில் மன்சூர் அலி கானை வைத்து தான் லோகேஷ் கனகராஜ் இயக்க நினைத்தார் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: 80ஸ் கிட்ஸ்களின் கவர்ச்சி கன்னி!.. இளசு முதல் பெருசு வரை ஏங்க வைத்த தீபா!..

அதன் விளைவாகவே லியோ படத்தில் மன்சூர் அலி கானுக்கு லியோ விஜய்யின் கதையை சொல்லும் முக்கியமான ரோலே கொடுத்திருந்தார். மேலும், ஃபிளாஷ்பேக் காட்சியே பொய் என்றும் அது மன்சூர் அலி கான் பர்செப்ஷன் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகை திரிஷா குறித்து மோசமான தொனியில் மன்சூர் அலி கான் பேசிய வீடியோ வைரலான நிலையில், அதை பார்த்த திரிஷா ‘மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை பார்த்தேன். அவர் என்னை அசிங்கமாக பேசியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். மிகவும் அறுவறுக்கத்தக்க, ஆபாசமாக அவர் பேசியிருக்கிறார். நீங்கள் அவரை பாராட்டி பேசுங்கள். ஆனால், அவருடன் இதுவரை நான் நடித்ததில்லை. அதேபோல் இனிமேல் எப்போதும் அவருடன் நடிக்க மாட்டேன். அந்த வகையில் சந்தோஷப்படுகிறேன். மனித சமுதாயத்திற்கு அவரை போன்றவர்கள் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்’ என விளாசி இருந்தார்.

இதையும் படிங்க: என்னை அசிங்கமா பேசிட்டாரு!.. எப்பவும் நடிக்க மாட்டேன்!. மன்சூர் அலிகானை போட்டு பொளந்த திரிஷா!..

நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக நடிகை மாளவிகா மோகனன் உடனடியாக மன்சூர் அலி கானுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லாரும் ஒரே டீமா வேலை பார்த்த நிலையில், திரிஷா குறித்து மிஸ்டர் மன்சூர் அலி கான் இப்படி பேசியது ரொம்பவே வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. மன்சூர் அலி கானின் இந்த மோசமான பேச்சை நான் கண்டிக்கிறேன்” எனக்கூறி திரிஷாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Next Story