என்னை அசிங்கமா பேசிட்டாரு!.. எப்பவும் நடிக்க மாட்டேன்!. மன்சூர் அலிகானை போட்டு பொளந்த திரிஷா!..

Mansoor alikhan: நடன நடிகராக இருந்து சண்டை காட்சிகளில் நடிக்க துவங்கி கேப்டன் பிரபாகரன் படம் மூலம் வில்லன் நடிகராக மாறியவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே அலட்டாலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து புகழின் உச்சிக்கு போனார். அதன்பின் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தார்.

தெனாவட்டான உடல் மொழி, நக்கலாக பேசும் வசனம் என தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி கொண்டார். பல திரைப்படங்களில் காமெடி வில்லனாகவும் நடித்திருக்கிறார். சில படங்களை இயக்கியும் நடித்திருக்கிறார். நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் செய்த அலப்பறை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒட்டிய ரசிகர்கள்.. ஓடிப்போய் அஜித்திடம் ஒப்பாரி வைத்த வெங்கட்பிரபு.. தல சொன்னது இதுதான்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த லியோ படத்திலும் நடித்திருந்தார். இப்போது சரக்கு என்கிற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ளார். இந்த படம் தணிக்கையில் சில பிரச்சனைகளை சந்தித்துள்ளது. சினிமாவில் மட்டுமில்லை நிஜ வாழ்விலும் மன்சூர் அலிகான் மனதில் பட்டதை பேசும் பழக்கமுடையவர்.

எதை பற்றியும் யோசிக்காமல், தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசும் நபர் இவர். இதனால் பல எதிர்ப்புகளையும், புகார்களையும், வழக்குகளையும் அவர் சந்திப்பதுண்டு. சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகானிடம் சினிமா போஸ்டர்களில் கதாநாயகிகளின் புகைப்படங்களை போடுவதில்லை என கவிஞர் வைரமுத்து பேசியது பற்றி அவரிடம் கேள்வி கேட்டனர்.

இதையும் படிங்க: பரபரப்பாகும் லேடி சூப்பர்ஸ்டார்… கணவரின் ஆர்டர் தான் காரணமா? பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

அதற்கு ‘நடிகைகளை போடுவதில்லையா?.. இப்ப கூட போடுவதில்லையா.. வில்லன் நடிகர்களையே போட மாட்றாங்க.. அவங்களுக்காகவும் வைரமுத்து ஐயா பேசணும். எல்லாம் நடிகர்களும் இனிமேல் கதாநாயகிகளின் படங்களை போடுங்க. லியோ படத்துல திரிஷா கூட நடிக்குறோமே என ஜாலியாத்தான் இருந்தேன்’ என பேசியிருந்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் அசிங்கமாக பேசியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் திரிஷா டிவிட்டரில் ‘மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை பார்த்தேன். அவர் என்னை அசிங்கமாக பேசியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். மிகவும் அறுவறுக்கத்தக்க, ஆபாசமாக அவர் பேசியிருக்கிறார். நீங்கள் அவரை பாராட்டி பேசுங்கள். ஆனால், அவருடன் இதுவரை நான் நடித்ததில்லை. அதேபோல் இனிமேல் எப்போதும் அவருடன் நடிக்க மாட்டேன். அந்த வகையில் சந்தோஷப்படுகிறேன். மனித சமுதாயத்திற்கு அவரை போன்றவர்கள் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்’ என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா நடிகர்களின் சொத்து பட்டியல் இதோ!.. நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இவரா?!…

 

Related Articles

Next Story