Cinema News
அண்ணா உட்ருண்ணா!.. லியோ ஃபிளாஷ்பேக்கே பொய்யாம்.. உருட்ட ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்!..
லியோ திரைப்படத்தில் மன்சூர் அலி கான் சொன்ன லியோ ஃபிளாஷ்பேக் காட்சிகள் தான் மொக்கையாக இருந்ததாக அனைவரும் விமர்சித்து தள்ளிய நிலையில், தற்போது அந்த ஃபிளாஷ்பேக் காட்சியே பொய் என லோகேஷ் கனகராஜ் லியோ டிகோடிங் பேட்டி கொடுத்து ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளார்.
லியோ படம் வெளியான உடனே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இதே மேட்டரை லீக் செய்த நிலையில், தான் ரசிகர்கள் பலரும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் டிகோடிங் பண்ண ஆரம்பித்தனர். அப்போதே இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் வரும் மன்சூர் அலி கான் சொன்ன கதையே பொய்யாக இருந்தால், லியோவுக்கு மட்டுமே அவன் யாரு என்று தெரியும் என்றும் அவனை பற்றி தெரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருப்பார்.
இதையும் படிங்க: மறுநாள் கச்சேரி! முதல் நாள் இரவு மூச்சுத்திணறல் – அரங்கமே கூடியிருக்க பாடகி ஜானகி செய்த மேஜிக்
இந்நிலையில், அதே கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜும் சமீபத்திய பேட்டியில் சொல்லி மீண்டும் தான் எடுத்த லியோ கதை தரமான கதை தான் என முட்டுக் கொடுக்க வந்து விட்டார் என ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் அண்ணா உட்ருண்ணா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
லியோ படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ படுத்தி வரும் ரஜினி ரசிகர்கள் அடுத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் எடுக்கும் போது, அவர் போல ஒரு ஜீனியஸ் டைரக்டரே இல்லை என புகழத்தான் போகின்றனர்.
இதையும் படிங்க: அந்த தியேட்டர் ஓனர் வாயை அடைக்க போன் போட்ட வி நடிகர்!.. தயாரிப்பாளருக்கு செம டோஸ்?..
ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனுக்கும் அதே கதை தானே நேர்ந்தது என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், கேஃபே சண்டைக்கு பிறகு உள்ளுக்குள் இருந்த லியோ வெளியே வந்து விட, அதன் பின்னர் யார் பார்த்திபன் என அழைத்தாலும் விஜய் திரும்ப மாட்டார் என்றும் இரண்டு மூன்று முறை கூப்பிட்டால் தான் பார்ப்பார் என்றும் இன்னொரு கதையையும் லோகேஷ் கனகராஜ் உருட்டி உள்ளார்.
பகத் ஃபாசில் மற்றும் லியோ இருவரும் ஒரே ஆசிரமத்தில் இருந்து வளர்ந்தவர்கள் தான் என்றும் இதெல்லாம் புரிய லியோ 2 அல்லது விக்ரம் 3 படம் வந்தால் தான் தெரியும் என்கிற அளவுக்கு பில்டப் செய்து தனது எல்சியூவை காப்பாற்ற முயற்சித்து வருகிறார்.