Connect with us
lokesh

Cinema News

லியோ கதை புதுசுன்னு நான் சொல்லவே இல்லையே!.. போட்டு தாக்கும் லோகேஷ் கனகராஜ்..

Lokesh kanagaraj: இப்போது சினிமா டாப்பிக்கை யார் பேசினாலும் அது லியோ பற்றித்தான் இருக்கிறது. விஜய் ரசிகர்களும், திரையுலகமும் பேசும் ஹாட் டாப்பிக்காக லியோ படம்தான் இருக்கிறது. ஏனெனில் அந்த அளவுக்கு பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்கி வைத்துள்ளது. இத்தனைக்கும் இந்த படத்தை இயக்கி லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் 4 திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார்.

இதில் விஜயை வைத்து அவர் எடுத்தம் மாஸ்டர் படமும், கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படமும்தான் ரசிகர்களிடம் அவரை பற்றிய இமேஜை உருவாக்கி வைத்துள்ளது. குறிப்பாக விக்ரம் பட கதைக்கு அவர் உருவாக்கியிருந்த திரைக்கதையும், காட்சிகளும், சூர்யா வைத்து அதகளம் செய்த ரோலக்ஸ் கதாபாத்திரமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து போனது.

இதையும் படிங்க: லியோ கிளைமேக்ஸில் தெறிக்கவிட்ட அர்ஜூன்!.. பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் செஞ்சதுதான் ஹைலைட்!…

பொதுவாக திரையுலகில் ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்தால் இது அந்த ஹாலிவுட் அல்லது கொரிய படத்தின் காப்பி என சிலர் ஆதாரங்களுடன் சமூகவலைத்தளங்களில் சொல்வார்கள். ஒரு சில காட்சிகள் ஒரேமாதிரி இருந்தாலும் மொத்த படமே காப்பி என சொல்லிவிடுவார்கள். அதை ரசிகர்களும் அப்படியே நம்பியும் விடுவார்கள். இதில், லோகேஷ் கனகராஜும் தப்பவில்லை.

அவர் இயக்கும் படங்களில் ஹாலிவுட் படங்களின் சாயல் இருப்பதாக வழக்கம்போல் ஒரு குரூப் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பேசி வருகிறது. இதுபற்றி லோகேஷ் இதுவரை எந்த விளக்கமும் அளித்தது இல்லை. அதிலும், விஜயை வைத்து அவர் மீண்டும் இயக்கியுள்ள லியோ படம் ஆங்கில படமான A history of violence படத்தின் அப்பட்டமான தழுவல் என லியோ படம் துவங்கியது முதலே சொல்லப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: லியோவில் த்ரிஷாவை வைத்து இப்படியொரு எல்சியூ கனெக்ட்டா?.. வெளியான செம மேட்டர்.. ஒருவேள இருக்குமோ?..

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் ‘‘லியோ படத்தின் கதை இதற்கு முன்பு வந்ததே இல்லை என நான் சொல்ல மாட்டேன். பல சினிமாவில் ரசிகர்கள் பார்த்த கதைதான். பல இயக்குனர்களும் பல மொழிகளில் இதை படமாக எடுத்துள்ளனர். ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான கதைதான் இது.

ஆனால், அதை என் பார்வையில் நான் எப்படி சொல்லி இருக்கிறேன் என்பதுதான் விஷயம். இப்படத்தை தியேட்டரில் பார்க்கும்போது அது புதிய அனுபவத்தை கொடுக்கும். நீங்கள் சிறிய செல்போனில் பார்ப்பதற்கும், தியேட்டரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. லியோ திரைப்படம் கண்டிப்பாக ஒரு விஸ்வல் ட்ரீட்டாக இருக்கும்’ என லோகேஷ் கூறினார்.

இதையும் படிங்க: லியோவில் முக்கியமானதே இதுதான்!.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. அண்ணாச்சியாக மாறிய லோகி!..

google news
Continue Reading

More in Cinema News

To Top