Connect with us
mansoor

Cinema News

மன்சூர் அலிகானிடம் லோகேஷ் போட்ட கண்டிஷன்.. அதான் தெறிச்சி ஓடுறாரு போல..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் நான ரெடி தான் பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதையும் படிங்க- எல்லாம் கூடி வந்தும் கமல் கூட நடிக்க முடியாம போச்சி!.. புலம்பும் மன்சூர் அலிகான்….

அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ற வகையில், படக்குழுவும் அடிக்கடி க்ளிம்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

லியோ படத்தில் நடித்த நடிகர்களை எங்கு பார்த்தாலும், ரசிகர்களும், நிருபர்களும், லியோ அப்டேட் கேட்க தொடங்கிவிடுகின்றனர். ஆனால், யாரும் வாய் திறக்கக்கூடாது என்று லோகேஷ் ஸ்டிரிக்காடக கூறிவிட்டார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படம் குறித்த எந்த விஷயங்களும் வெளியே கசிந்துவிட கூடாது என்று மிக எச்சரிக்கையாக இருந்து வருகிறார். இதுவரை வெளியான ப்ரோமோ வீடியோக்களில் கூட சென்னை அருகே செட் போட்டு எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் எடுக்கப்பட்ட ஒரு சீன் கூட லீக் ஆகி விடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். நடிகர் மன்சூர் அலிகான் பொதுவாகவே, மேடைகளில் பேசினால், வெளிப்படையாக எல்லாவற்றையும் கூறிவிடுவார்.

இதனால் லோகேஷ் மன்சூர்அலிகானிடம் தனியாக அழைத்து, லியோ படம் குறித்து எதையும் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பயந்து தான் மன்சூர் அலிகான் சமீப காலமாக, மைக்கை பார்த்தாலே ஓடி விடுகிறார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- கோபத்தில் விஜயகாந்த் என்னை எட்டி உதைச்சாரு!.. நாங்க போடாத சண்டையா?- கூலா சொன்ன மன்சூர் அலிகான்…

google news
Continue Reading

More in Cinema News

To Top