Connect with us

Cinema History

விஜய் படத்தில் 2 பெரிய தப்பு செஞ்சிட்டேன்… நடிகரிடம் மன்னிப்பு கேட்ட லோகேஷ் கனகராஜ்!..

வெறும் நான்கே திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும் அனைத்து படங்களிலும் பெரும் ஹிட் கொடுத்த காரணத்தினால் தற்சமயம் சங்கர் மாதிரியான பெரிய இயக்குனர்கள் பெரும் சம்பளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அவர் இயக்கிய முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்திற்கு 5 லட்சம் ரூபாய்தான் சம்பளமாக வாங்கினார் ஆனால் தற்சமயம் விஜய்யை வைத்து அவர் இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என கூறப்படுகிறது தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு இயக்குனரும் இவ்வளவு குறைந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டது கிடையாது.

கைதி திரைப்படத்திற்கு பிறகு பெரிய ஹீரோவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் படத்தை விஜய்யை வைத்து இயக்கும் பொழுதுதான் அவருக்கு விக்ரம் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

லோகேஷ் செய்த தவறு:

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் பெரும் நடிகர்கள் பலரை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருப்பார். அப்படி நடிக்க வைத்த கதாபாத்திரங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் சாந்தனு. மாஸ்டர் படத்தை படமாக்கும் பொழுது அதில் சாந்தனு கதாபாத்திரமான பார்கவ் கதாபாத்திரத்திற்கு அதிக காட்சிகள் எடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட விஜய்யும் சாந்தனுவும் சேர்ந்து சண்டையிடுவது போன்ற காட்சிகள், காதலிக்கு தனியாக பாடல் காட்சிகள் இப்படி பல காட்சிகள் சாந்தனுவிற்காக எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகும் பொழுது சாந்தனுவின் காட்சிகள் மிகக் குறைவாகவே இருந்தன. இதை அறியாமல் படம் வெளியாவதற்கு முன்பு பேட்டி கொடுத்த சாந்தனு தனக்கு அந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக கூறியிருந்தார்.

இதனால் சாந்தனு அதிக விமர்சனத்திற்கு உள்ளானார் பிறகு லோகேஷ் கனகராஜ் சாந்தனுவிடம் இது குறித்து பேசும் பொழுது பார்கவ் கதாபாத்திரம் மற்றும் ஆண்ட்ரியா கதாபாத்திரம் இரண்டையும் நான் நல்லபடியாக எடுக்க நினைத்து மோசமாக எடுத்து விட்டேன் எனக்கூறி சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: வாடிவாசல் வாய்ப்பை தவறவிட்ட கௌதம் மேனன்?… ஃபர்ஸ்ட் பிளான் போட்டது இதுதானா?

google news
Continue Reading

More in Cinema History

To Top