More
Read more!
Categories: Cinema News latest news

இனிமே லோகியை நம்பி யாரும் பேட்டி கொடுத்திடாதீங்கப்பா!.. அப்புறம் செஞ்சிப்புட போறாரு..!

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்செட் இயக்குனராகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் லியோ படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் விமர்சனங்கள் தற்போது கலவையாகவே வந்து கொண்டு இருக்கிறது.

ஜெயிலர் படத்தினை தொடர்ந்து இந்த படத்தில் மிகப்பெரிய ஸ்டார்கள் இணைந்து நடித்தனர். ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், அனுராக் கஷ்யப் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். 

Advertising
Advertising

இதையும் வாசிங்க:எதிர்மறையான கதாபாத்திரத்தில் கலக்கிய சிவாஜி கணேசன்… எந்த படத்துலனு தெரியுமா?…

பெரும்பாலும் லோகேஷ் படத்தில் ஒரு காட்சியில் நடித்தாலே பிரபலம் ஆகிவிடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அது கைதியில் தொடங்கி சமீபத்தில் வெளியான விக்ரம் வரை உறுதியாகி இருக்கிறது. இதனால் லோகி ஒரு காட்சிக்கு நடிக்க கூப்பிட்டாலே பெரிய நட்சத்திரங்கள் கூட ஓகே சொல்லிவிடுகின்றனர்.

முக்கியமாக விக்ரமில் லோகேஷ் கேட்டு கொண்டதுக்கு இணங்க சூர்யா நடித்த சில காட்சிகள், கார்த்தி வாய்ஸ் கொடுத்த விஷயங்கள் எல்லாம் நடந்தது. ஆனால் பெரும்பாலும் நடிகைகள் லோகி படத்தில் நடிக்க தயங்குவார்கள். காரணம் அவர் படத்தில் நடிகைகளை போட்டு தள்ளி விடுவார்.

இதையும் வாசிங்க:அனிருத்துக்கே தம்மாத்துண்டு தானா..! அட்லீயே பரவாயில்லப்பா… இந்த லோகேஷ் இப்படி பண்ணிட்டாரே..!

ஆனால் பாலிவுட்டின் பிரபல நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யப் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முக்கிய வில்லனாக நடித்து கடைசியில் கொடூரமாக செத்து போக வேண்டும் என ஆசையாக இருப்பதாக கூறினார். 

அவ்வளவு தானே சார் என லியோ படத்துக்காக அனுராக் காஷ்யப்பை கூட்டி வந்த லோகேஷ் கனகராஜ் ஒரே காட்சியில் நடிக்க வைத்து எப்போதும் போல போட்டுத்தள்ளி விட்டார் என்ற தகவலும் இணையத்தில் உலா வருகிறது. எப்பா யோசிக்காம இனி பேட்டி யாரும் கொடுக்காதீங்கப்போ!

Published by
Akhilan

Recent Posts