Lucky baskar: 10 நாட்களில் லக்கி பாஸ்கர் செய்த மெகா வசூல்!.. 100 கோடி கிளப்பில் இணையுமா?…

Published on: November 11, 2024
lucky
---Advertisement---

Lucky baskar: சில படங்கள் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களை ஏமாற்றிவிடும். பீஸ்ட், இந்தியன் 2 போன்ற படங்களை உதாரணமகா சொல்ல முடியும். சில படங்கள் எதிர்பார்க்காமல் வந்து ஹிட் அடித்துவிடும். வாழை, லப்பர் பந்து போன்ற படங்களை அப்படி சொல்ல முடியும்.

துல்கர் சல்மான்: இந்த லிஸ்ட்டில் இப்போது லக்கி பாஸ்கர் படமும் இணைந்திருக்கிறது. மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து கலக்கி வருபவர்தான் துல்கர் சல்மான். ஹிந்தியில் சில படங்களில் நடித்திருக்கும் துல்கர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, ஹே சினாமிகா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: Ajith: அஜித்தை யாராவது திட்டி பாருங்க.. இதுதான் நடக்கும்! அதன் பிறகு யாரும் திட்ட மாட்டிங்க

தீபாவளி ரிலீஸ்: சமீபகாலமாக தெலுங்கில் நடிக்க துவங்கிவிட்டார். ஏற்கனவே, இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றது. மேலும், தீபாவளியை முன்னிட்டு கடந்த 31ம் தேதி லக்கி பாஸ்கர் வெளியானது. இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் கணிசமான தியேட்டர்களில் வெளியானது.

அமரன், பிளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்கள் வெளியானாலும் என்னுடைய படமும் உங்களுக்கு பிடிக்கும் பாருங்கள் என புரமோஷனில் பேசினார் துல்கர். பிளடி பெக்கரும், பிரதரும் ரசிகர்களை ஈர்க்காத நிலையில் லக்கி பாஸ்கர் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. எனவே, அந்த படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது.

lucky baskar
#image_title

லக்கி பாஸ்கர் வசூல்: படம் வெளியாகி 10 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் 88.7 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இப்படியே போனால் இன்னும் சில நாட்களில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என கணிக்கப்படுகிறது. தீபாவளி ரிலீஸில் அமரன் படம் 200 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், லக்கி பாஸ்கர் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க: Ajith: நேருக்கு நேரா மோதணும்னா எதிரியும் வலுவா இருக்கணும்… எப்படி இருக்கு அஜீத் ஸ்டைல்?